நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள பனங்கான் திரைப்படம் இன்று திரைக்கு வரும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து திரையரங்குகளுக்கு வந்திருந்தனர். ஆனால் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.
என்ன காரணம் என்றால் படம் ரிலீஸ் கேடிஎம் என்று சொல்லக்கூடிய கீ டெலிவரி மெசேஜ் இன்னும் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் காலை 9 மணி காட்சி ஒளிபரப்ப தயாராக இருந்த பல திரையரங்குகள் ஒன்பது மணி காட்சியை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன.
இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே ஒரு டஜன் படங்கள் வெளியாவதன் காரணமாக வணங்கான் திரைப்படத்திற்கு வெறும் 300 திரைகள் தான் கிடைத்திருந்தது.
படம் ரசிகர்களை கவரும் பட்சத்தில் அடுத்தடுத்து திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ரசிகர்கள் பலரும் காத்திருந்தனர்.
ஆனால், படம் இன்னும் வெளியாகாமல் இருப்பது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்துவிட்டு டிக்கெட்விற்பனை செய்துவிட்டு இப்படி ஒரு பிரச்சனை கடைசி நேரத்தில் வந்துவிடும் என பட குழுவுக்கு தெரியாதா..?
அவ்வளவு அஜாக்கிரதையாக படக்குழு பணியாற்றிக் கொண்டிருக்கிறதா..? எதனால் கே டி எம் இன்னும் விநியோகிக்கப்படவில்லை என்ற கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள் ரசிகர்கள்.
Summary in English : Fans of the popular Vanangaan morning show were left fuming this week after the unexpected cancellation due to a KDM ( Key Delivery Message )issue. It seems like just when viewers were settling in with their coffee and ready for some light-hearted banter, the plug was pulled, leaving everyone scratching their heads.