முதல் பாதி ஆமை வேகம்..! இரண்டாம் பாதி புயல் வேகம்..! “வணங்கான்” திரைவிமர்சனம்..!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் காலை காட்சிகள் ஒளிபரப்புவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. கடைசி நேரத்தில் கேடிஎம் வழங்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சம்பந்தமாக பல்வேறு திரையரங்குகள் 9 மணி மற்றும் 10 மணி காட்சிகளை ரத்து செய்தன.

11 மணிக்கு மேல் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது என தெரிய வருகிறது. 11 மணிக்கு பிறகான காட்சிகள் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார்.

நடிகர் சமுத்திரகனி, மிஸ்கின், அருள் தாஸ், நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.

கதை என்ன..?

சுனாமியால் பெற்றோர்களை இழந்த அண்ணன் தங்கையாக வளர்ந்து வருகிறார்கள் கதாநாயகனும் அவருடைய சகோதரியும். வழக்கம் போல கதாநாயகனை கதாநாயகி துரத்தி துரத்தி காதலிக்கிறார். அவர் வீட்டு அருகே இருக்கக்கூடிய ஒரு பெண்.

வாய் பேச முடியாத காது கேட்காத கதாநாயகன் தனக்கு தவறு என்று படக்கூடிய விஷயங்களை யார் தடுத்தாலும் தட்டிக் கேட்கிறார். தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணை காதலிக்க மறுக்கிறார் ஒரு கட்டத்தில் காதல் வயப்படுகிறார்.

எந்த வேலையும் இல்லாத காரணத்தினால் தான் இவர் அடிதடி என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கென ஒரு நிரந்தரமான வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவருடைய நலம் விரும்பிகள் முடிவு செய்து மாற்றுத்திறனாளிகள் தங்கி இருக்கக்கூடிய ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் பணிக்காக சேர்த்து விடுகிறார்கள்.

அங்கே சேர்ந்த பிறகு இரண்டு கொலைகளை செய்கிறார் கதாநாயகன். நான் தான் அந்த கொலையை செய்தேன் என நீதிமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார். அவர்களை கொலை செய்ததற்கான காரணத்தை மட்டும் நான் சொல்ல மாட்டேன் என விடாப்பிடியாக இருக்கிறார். சொல்லவும் மறுக்கிறார். மட்டுமில்லாமல் இன்னொருவனையும் கொலை செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்.

கதாநாயகனின் இந்த கொலைவெறிக்கு என்ன காரணம்..? எதற்காக கொலை செய்த அடுத்த நாளே நான் தான் கொலை செய்தேன் என ஒப்புக்கொள்கிறார். அந்த மூன்றாவது நபரை கொலை செய்தாரா இல்லையா..? இந்த நேரத்தில் அவருடைய தங்கை மற்றும் அவருடைய காதலி என்ன ஆனார்கள்..? என்பது பற்றிய சுவராசியமான கதை தான் வணங்கான்.

படம் எப்படி இருக்கிறது

படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்கிறது கதையைப் படிக்கும் போது தெரிந்திருக்கும்.. அண்ணன் தங்கை பாசம் கதாநாயகனை கதாநாயகி துரத்தி துரத்தி காதலிப்பது கதாநாயகன் குற்ற சம்பவங்களை கண்டு அடிதடி என இறங்குவது இப்படியாகவே கதை எதை நோக்கி பயணிக்கிறது என்றே தெரியாமல் இடைவேளை வரை கதையை நகர்த்தி செல்கிறார்கள்.

இடைவேளைக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் கதை என்ன..? கதை எதை நோக்கி நகரப் போகிறது..? என்பதை சொல்கிறார்கள். மிரட்டலான இடைவேளை காட்சியுடன் இரண்டாம் பாதியில் வந்த அமர்ந்தால் புயல் வேகத்தில் கதை திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பரபரப்பான காட்சி அமைப்புகளுடன் இயக்குனர் பாலாவுக்கே உரித்தான ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகள் என படம் பரபரவென பறக்கிறது. படத்தின் மிக முக்கியமான பிளஸ் பாயிண்ட் என்று பார்த்தால் நடிகர் அருண் விஜயை தவிர படத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுமுகங்கள்.

இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக பார்க்கலாம். ஒருவேளை கதாநாயகனாக சூர்யாவோ, கதாநாயகியாக கீர்த்தி செட்டியோ.. கதாநாயகனின் தங்கையாக மிமிதா பைஜூவோ நடித்திருந்தால் இந்த படத்தினுடைய கலரே மாறி இருக்கும்.

இவ்வளவு சிறப்பாக படம் வந்திருக்குமா..? என்பது கேள்விக்குறியாகி இருக்கும். ஆனால், எல்லோரும் புதுமுகங்கள் என்றாலும் கூட அவ்வளவு அருமையாக தங்களுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி மிரட்டி இருக்கிறார்கள்.

படம் பாக்க போலாமா..?

முதல் பாதி மிகவும் மெதுவாகத்தான் நகரும். அதனை அமர்ந்து பார்ப்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இருக்கிறது என்பவர்கள் நிச்சயமாக இந்த படத்தை பார்க்கலாம். இரண்டாம் பாதியில் பரபரப்பாக பல்வேறு திருப்பங்களுடன் நம்மை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கதைக்களமாக அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இயக்குனர் பாலாவுக்கு என இருக்கும் ரசிகர் பட்டாளம் முழு திருப்பதி அடையும் படமாக வணங்கான் அமைந்துள்ளது.

Summary in English : If you’re thinking about catching “Vanangaan,” buckle up for a wild ride! The first half of the movie moves at a pace that can only be described as tortoise-like. Seriously, As soon as the intermission hits, things shift gears faster than a cyclone. The second half is packed with action and unexpected twists that’ll leave you on the edge of your seat.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam