“எவ்ளோ கீழ இறக்குனாலும்.. இதை மட்டும் விட கூடாது..” நயன்தாரா யாரை சொல்கிறார்..?

நடிகை நயன்தாரா தன்னுடைய ஃபெமி9 நிறுவனத்தின் விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் அவர் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் குறிப்பிடும் படியாக பெண்களுக்கு சில அறிவுரைகளை கூறியிருந்தார் நடிகை நயன்தாரா.

அவர் கூறியதாவது, ஒரு பெண்ணாக நம்மை எந்த அளவுக்கு அடக்கினாலும் எந்த அளவுக்கு கீழே இறக்கினாலும் நாம் ஒரு விஷயத்தை மட்டும் விட்டு விடவே கூடாது.

அது தான் நாம் நம் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை. இன்னொன்று நமக்கு நம் மீது வைத்திருக்கக்கூடிய மரியாதை.

இந்த இரண்டையும் விட்டுவிடக்கூடாது.. இந்த இரண்டையும் நாம் விடக்கூடாது என்றால் அதற்கு சில விஷயங்களை செய்ய வேண்டும்.

நம் மீது எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதனை கேட்டுக்கொள்ள வேண்டும்.. நம்மை குறை கூறுவார்கள்.. நம்மை கிண்டல் செய்வார்கள்.. ஆனால், அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் நம்முடைய வேலை என்னவோ அதனை மட்டும் நாம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

வேறு யாருடைய பேச்சுக்கும் காது கொடுக்காமல் நம்முடைய வேலை என்னவோ அதில் மட்டும் நாம் கவனம் செலுத்தி சென்று கொண்டிருந்தோம் என்றால் நம் மீது நமக்கு நம்பிக்கை பிறக்கும் நம் மீது நமக்கு மரியாதை பிறக்கும் என பேசி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Actress Nayanthara recently shared some inspiring thoughts on what she believes drives women’s success. She emphasizes that self-confidence and self-respect are the real game-changers. It’s not just about talent or hard work; it’s about believing in yourself and valuing your worth.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam