கவர்ச்சி நடிகை சகீலாவிடம் கன்னட நடிகை மாலதி வெளிப்படுத்திய அதிர்ச்சி தகவல் பற்றிய பதிவு தான் இது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்த ஷகிலாவிடம் கன்னட நடிகை மாலதி தனது கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். “என் கணவரைத் தவிர எல்லோரும் என்னை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள்” எனும் அவரது தைரியமான பேச்சு சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலதியின் அதிர்ச்சி தகவல்
கன்னட சினிமாவில் துணை நடிகையாக திகழ்ந்து வரும் மாலதி, தனது சினிமா வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, பல நடிகர்கள், இயக்குநர்கள் தன்னை தவறாக அணுகியதாகவும், பட வாய்ப்புக்காக தன்னை தியாகம் செய்யுமாறு வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
“அம்மாவாக நடிக்க சென்றாலும் கூட அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் டார்ச்சர் செய்து வருகின்றனர். இதனால், சினிமாவில் நடிக்கவே வேண்டாம் என முடிவு செய்து விட்டேன்” என கன்னட நடிகை மாலதி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஷகிலாவின் பதில்
மாலதியின் இந்த தகவலை அறிந்து கொண்ட ஷகிலா, இது தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார். நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் நீச்சல் உடையில் சில காட்சிகள் படமாக்கினார்கள். அப்போது அந்த நீச்சல் உடை எனக்கு சவுகரியமாக இல்லை.காட்சிகளை படமாக்கி முடித்த பின் நான் நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வந்த போது என்னுடைய முன்னழகு முழுதும் வெளிய வந்து அங்கு கூடியிருந்த அத்தனை பேர் முன்பும் கையை வைத்து மறைத்து கொண்டு அறைக்கு ஓடினேன்.
ஆனால், “சினிமாவில் இதுபோன்ற பிரச்சினைகள் இன்னும் இருப்பது வேதனையான விஷயம். பெண்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை இழக்க நேரிடுவது மிகவும் வருத்தமாக உள்ளது. இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசும் மாலதியை நான் பாராட்டுகிறேன்” என ஷகிலா தெரிவித்துள்ளார்.
சினிமா உலகின் இருண்ட முகம்
மாலதியின் அனுபவம், சினிமா உலகின் இருண்ட முகத்தை வெளிக்காட்டுகிறது. பல பெண்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை இழக்க நேரிடுவது. கனவை நிறைவேற்ற சென்றால் தன்னையே இழக்க நேரிடுவது மிகவும் வேதனையான விஷயம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசு மற்றும் சினிமா உலகினர் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என பொறுமுகிறார்.
நடிகை மாலதியின் அனுபவம், சினிமா உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து ஒரு முக்கியமான விவாதத்தைத் தொடங்கியுள்ளது. இந்த விவாதம், சினிமா உலகில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க உதவும் என்று நம்பலாம்.