“14 நாடுகள் இந்த பொம்மை படத்தை தடை பண்ணியிருக்கு..” – என்ன காரணம்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

டிஸ்னி மற்றும் பிக்ஸார் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து டாய் ஸ்டோரி சீரியஸ் என்ற வரிசையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களை கொண்டு அனிமேஷன் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றது.

இந்த படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இப்படியான படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக குழந்தைகள் இந்த படங்களை அதிகமாக விரும்பி பார்க்கின்றனர்.

இந்த படத்தில் வரக்கூடிய முக்கியமான கேரக்டர் “பஸ் லைட் இயர்” என்பதாகும். தற்போது இந்த கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு லைட் இயர் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் அங்கஸ் மேக்லேன் என்பவர் இயக்கியுள்ளார்.நேற்று (ஜூன் 18) உலகம் முழுதும் இந்த திரைப்படம் வெளியானது.

அதேசமயம் அரபு நாடுகள் எகிப்து மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா லெபனான் உள்ளிட்ட 14 நாடுகள் இந்த படத்திற்கு தடை விதித்துள்ளது.

உலகிலேயே முதன்முறையாக ஒரு கார்ட்டூன் திரைப்படம் இத்தனை நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது இதுவே முதல் முறையாகும்.

குழந்தைகளை கவரக்கூடிய கார்ட்டூன் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் எந்த நாடும் தடை சொன்னதே கிடையாது. அப்படி இருக்கையில். இந்த படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை நாடுகள் தடை விதித்துள்ளன என்பதற்கான காரணங்களை இங்கே நாம் பார்ப்போம்.

இந்தப் படம் இத்தனை நாடுகளில் தடை விதிக்கப்பட்ட தற்கான முக்கியமான காரணம், இந்த படத்தில் வரும் ஹீரோ இரண்டு திருமணம் செய்து கொண்டவராக காட்டப்படுகிறார்.

மேலும் இந்த படத்தில் லிப் லாக் முத்தக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், உச்சகட்டமாக ஓரினச்சேர்க்கை சம்பந்தப்பட்ட காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

எனவே இதனை பார்க்கும் குழந்தைகள் அவருடைய மனதில் இவையெல்லாம் சரியானது என்ற எண்ணம் தோன்ற காரணமாக அமைந்து விடக்கூடும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடுகள் இந்த படத்திற்கு தடை விதித்துள்ளன.

இதனை அறிந்த நெட்டிசன்கள் இந்தியாவில் சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கணவரை தாண்டி வேறு ஆண்களுடன் தொடர்பு கொண்டு பெண்கள் திருமணம் தாண்டிய உறவு வைத்துக் கொள்பவர்கள் என்ற அடிப்படையிலும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்றெல்லாம் விசித்திரமான தீர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த நாடுகள் என்னவென்றால் ஒரு திரைப்படத்தில் இப்படியான காட்சிகள் இடம் பெற்ற காரணத்தினால் இந்த படத்தை தடை செய்துள்ளார்கள் என்று ஷாக்காகி கிடைக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …