“தாங்காது.. தாங்காது..” – ஓவர் கண்டிஷன் போடும் நயன்..! – இதுக்கு காரணம் நம்ம விக்கி தான்..!

சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானவர் நடிகை நயன்தாரா. ஆனால் எவ்வளவு சர்ச்சைகள் வந்தாலும் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் உட்பட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

மகாபலிபுரத்தில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து இவர்களது திருமணம் நடைபெற்றது. இதற்கான ஒட்டு மொத்த செலவையும் பிரபல OTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் ஏற்றுக்கொண்டது.

பெண் அழைப்பு முதல் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அழைத்து செல்வது வரை என அனைத்து நகர்வுகளையும் அப்படியே படமாக்கி ஒரு வீடியோவாக தன்னுடைய OTT தளத்தில் வெளியிட்டு கொள்ள உரிமையை இதன் மூலம் பெற்றிருக்கிறது அந்த நிறுவனம்.

இதனை பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே முதன் முறையாக ஒரு கல்யாணத்தை சினிமா இயக்குனர் இயக்கத்தில் நடத்திய கோஷ்டி நம்ம நயன்தாரா கோஷ்டி தான் என்று கூறலாம்.

இந்நிலையில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் நயன்தாரா இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களிடம் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாராவை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறேன் பேர்வழி என்ற பெயரில் படப்பிடிப்பு தளத்தில் சொல்லமுடியாத கண்டிஷன்களை போட்டு படக்குழுவை கடுப்பேத்துகிறாராம் விக்னேஷ் சிவன்.

அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான O2 என்ற திரைப்படத்தில் பேருந்து மண்ணில் மூழ்குவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

இந்த காட்சியை படமாக்கப்படும் போது எக்காரணம் கொண்டும் நயனின் மீது பட்டுவிடக் கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன் போட்டாராம் நயன்தாரா. இதனாலேயே கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் படப்பிடிப்பு தாமதம் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பெல்லாம் எந்த கண்டிஷனும் படத்திற்கு தேவையான காட்சிகளை அப்படியே நடித்து கொடுக்கும் நயன்தாரா, தற்போது விக்னேஷ் சிவன் வருகைக்குப் பிறகு இப்படி பல கண்டிஷன்கள் போட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் என்னென்ன கண்டிஷன் போடப் போகிறாறோ..? என்ற கேள்வி எழுப்புகின்றனர் இயக்குனர்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …