கப்பலில் பிரபல நடிகருடன் ரொமான்ஸ்..! – நீக்கப்பட்ட மைனா நந்தினியின் சூடான காட்சிகள்..! – வைரல் வீடியோ..!

நடிகை மைனா நந்தினி சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்து இருந்தார் இந்நிலையில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இது குறித்து நடிகை மைனா நந்தினி கூறுகையில், விக்ரம் படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மறக்க முடியாத ஒன்று. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்து முடியும் நாள் வரை பகத் பாசில் சாரையும், கமல் சாரையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

அவர்கள் இல்லாத போர்ஷன் இதுதான் எனக்கான காட்சிகளில் இருந்தது. இந்த படத்தில் நான் நடித்த சில காட்சிகள் நீக்கி உள்ளார்கள். அதில்,  விஜய் சேதுபதிக்கு அருகில் நான் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருப்பேன்.

விஜய் சேதுபதி ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கொடுக்கணும்.. அவ்வளவு கொடுக்கணும் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ஷிவானி அங்கே வருவார். அப்பொழுது இந்த மூன்றாவதுக்கு 10 லட்சம் என்று கூறுவேன். அந்த காட்சியை நீக்கி விட்டார்கள்.

மேலும் கப்பலில் ஒரு காட்சி இருக்கும் அந்த காட்சியில் ஒரு ட்ரம்மில் ஒரு ஆளை கொன்று போட்டு விடுவார் விஜய்சேதுபதி. அடுத்த நொடியே என்னுடன் ரொமான்ஸ் செய்து கொண்டு மீன் சாப்பிடுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால், அந்த காட்சியையும் நீக்கி விட்டார்கள். இந்த காட்சிகள் தற்போது தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மைனா நந்தினி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …