ஊதி பெருசாக்கிட்டங்க.. – கடும் கோபத்தில் ஸ்ருதிஹாசன்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வந்த ஒரு நடிகை தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தை வெளியிட்டுள்ளார். இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது மும்பையைச் சேர்ந்த சாந்தனு என்ற ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன் தற்பொழுது தனக்குள்ள பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் நான் மோசமான பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாக கூறியிருந்தார்.

இதனால் எனக்கு சீரற்ற மாதவிடாய் வரக்கூடிய பிரச்சினை இருக்கின்றது இது போன்ற கடினமான சூழ்நிலைகளை கையாள ஆரோக்கியமான உணவு மற்றும் முறையான தூக்கம் ஆகியவற்றை சமீப காலமாக நான் பெண் பெண் பற்றி வருகின்றேன்.

இது ஒரு சவாலான பயணம் தான் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசனுக்கு ஏதோ கொடிய நோய் இருப்பது போல சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தது. உச்சகட்டமாக ஸ்ருதிஹாசன் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் தான் உடல் இளைத்துக்கொண்டே போகிறார் என்று வாய்க்கு வந்ததை எழுதி வந்தனர் சில ஆசாமிகள்.

இப்படியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஸ்ருதிஹாசன் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார். அதாவது, நான் மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகின்றது.

ஆனால் அப்படி எதுவும் கிடையாது நான் நலமாக உள்ளேன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நான் கூறிய ஒரு சிறிய பிரச்சினையை ஊதி பெரிதாக்கி விட்டார்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …