விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தமிழ்செல்வி.
இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராட்சசன் திரைப்படத்தில் நடித்த ரவீனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மௌனராகம் சீரியல் நடித்த நடிகை தமிழ் செல்வி ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியல் மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் கௌதம் கார்த்தி நடிப்பில் வெளியான ஹரஹர மகாதேவகி என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் ஜில்லா மற்றும் மெர்சல் விஷாலின் கதகளி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தவிர்க்காமல் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக முயன்று வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கின்றார். அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
தற்போது உன் நெனப்பு நெஞ்சுகுழி வர இருக்கு என்று ரொமான்டிக் பாடலுக்கு ரீல்ஸ் விட்டுள்ளார். அந்த வீடியோ வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் தமிழ்ச்செல்வியா இது..? என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர்.