F**K You.. நான் உன்னை பாத்துட்டு இருக்கேன்.. வரலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ..!

சமீபத்தில் பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சில வாரங்கள் தனிமையில் இருந்த வரலட்சுமி முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு அவற்றில் இருந்து மீண்டார்.

தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்குள் நுழைந்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மட்டுமில்லாமல் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

இந்நிலையில், கொரோனாவுடன் நான் செய்தது இது தான் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது இந்த படம் ஒரே ஷாட்டில் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது ஆனால் நடிகை வரலட்சுமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனாவுடன் நான் எப்படி டீல் செய்தேன் என்று வரலட்சுமி வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …