உன் மாமனுக்கே சொல்லி கொடுத்தவன் டா.. நீ யாரு டா.. – தனுஷ்-ஐ திட்டிய வடிவேலு..! – உண்மை சம்பவம்..!

நடிகர் வடிவேலு : நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருப்பார். ஆனால், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் வடிவேலு தான் என்பது பழைய கதை.

ஆனால், இந்த படத்தில் இருந்து ஏன் வடிவேலு விலகினார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மீசை ராஜேந்திரன் படிக்காதவன் படத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில பிரச்சினைகளை போட்டு உடைத்துள்ளார்.

இந்த தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அவர் கூறியதாவது, படிக்காதவன் படத்தில் வடிவேலு மற்றும் தனுஷ் ஆகியோர் நேருக்கு நேர் நின்று கொண்டு வசனம் பேசுவது போன்ற காட்சி. அந்தக் காட்சியில் நடிகர் வடிவேலு நடித்து கொண்டிருந்த பொழுது இயக்குனர் சொன்னதற்கு மாறாக வேறு பக்கம் திரும்பி விடுவார்.

இந்த காட்சி மட்டும் கிட்டதட்ட 10-க்கும் மேற்பட்ட டேக்குகள் சென்றது. இதனால் கடுப்பானார் இயக்குனர் சுராஜ். காட்சி படமாகக் நீண்ட நேரம் சென்றதால் லைட்டிங் எல்லாம் மாறிவிட்டது.

இதனால் லைட்டிங் அட்ஜஸ்ட் செய்ய கேமராமேன் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். அந்த நேரத்தில் சீக்கிரம் லைட்டிங்க செட் பண்ணுங்க. சாருக்கு நிமிஷத்துக்கு சம்பளம் போயிட்டு இருக்கு என்று வடிவேலுவை பார்த்து கூறினார் இயக்குனர் சுராஜ்.

இப்படிக் கூறியதும் நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ்-ஐ பார்த்து கடுமையாக முறைத்து பார்த்தார். அதன் பிறகு இந்த காட்சி படமாக்க தொடங்கினார்கள். ஆனால் நடிகர் வடிவேலு மீண்டும் அதே தவறை செய்தார். தொடர்ந்து இயக்குனர் சுராஜ் இருக்கும் வடிவேலுவும் சின்ன வாக்குவாதம் நடைபெற்றது.

அதில் திரும்பாமல் தனுஷை பார்த்து இந்த வசனத்தை பேசுங்கள் அது தான் சரியாக இருக்கும் என்று கூறினார் சுராஜ். ஆனால், நடிகர் வடிவேலு நான் திரும்பிகிறேன் அப்புறம் மைண்ட் வாய்ஸ்ல அந்த குரலை டப் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

ஆனால், சுராஜ் விடாப்பிடியாக நீங்கள் தனுஷை பார்த்தே இந்த வசனத்தை பேசுங்கள் என்று கூறினார். அந்த நேரத்தில் நடிகர் தனுஷ். சார் அவரு சொல்ற மாதிரியே நடிச்சுருங்க சார்.. என்று வடிவேலுவிடம் கூறினார்.

இதனால் நடிகர் வடிவேலு பயங்கரமான கடுப்பாகி தனுஷை பார்த்து கடுமையாக முறைத்தார். அந்த அந்த நாள் அந்த காட்சி படமாக்கப்படவில்லை. சூட்டிங் பேக்கப் செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கும் விடுதிக்குச் சென்ற நடிகர் வடிவேலு, நான் சந்திரமுகி படத்தில் அவனுடைய மாமனுக்கு சொல்லிக்கொடுத்தேன்.. இவன் என்னடான்னா என்கிட்ட வந்து டைரக்டர் சொல்ற மாதிரி நடிங்க அப்படின்னு நீங்க இப்படி நடிங்கன்னு சொல்லிக் கொடுத்துட்டு இருக்கான் என்று தனது உதவியாளர்களிடம் சண்டை போட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வில்லன் நடிகராக நடித்திருந்த நடிகர் சுமன்-னுக்கு ஒரு காட்சியில் நடிகர் வடிவேலு அவருக்கு கால் அமுக்கி விடுவது போன்ற ஒரு காமெடி காட்சி படமாக்கப்பட இருந்தது.

படப்பிடிப்பு தளம் பக்காவாக செட் செய்யப்பட்டது, துணை நடிகர்கள், கேமரா என அனைத்தும் பக்காவாக செட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நடிகர் வடிவேலு நான் தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய காமெடி ஆக்டர் நான் வந்து இவனுக்கு கால் அமுக்கனுமா..? என்று இயக்குனரிடம் சண்டை போட்டார்.

இயக்குனரும் இந்த காட்சி மிகவும் காமெடியாக இருக்கும் தயவுசெய்து செய்து நடித்து கொடுங்கள் என்று கூறினார். சிறிது நேரம் இது பற்றி விவாதங்கள் போய்க்கொண்டிருந்தது.

ராமோஜிராவ் ஃப்லிம் சிட்டியில் இந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென தன்னுடைய உதவியாளர்களை கூட்டிக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார் வடிவேலு.

நான் கிளம்புகிறேன் என்று கூட யாரிடமும் சொல்லாமல் அவர் பாட்டுக்கு கிளம்பி போய்விட்டார். இதனால் அன்று படப்பிடிப்பு மிகுந்த பாதிப்புக்குள்ளானது. சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து நடிகர்களும் மீண்டும் சென்னைக்கு அழைத்து வரும் சூழ்நிலை.

அதன் பிறகுதான் சில நாட்கள் கழித்து நடிகர் விவேக் இந்த படத்தில் காமெடியனாக நடித்தார் என்று கூறியுள்ளார் நடிகர் மீசை ராஜேந்திரன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …