6 வருஷமா துரத்தி துரத்தி டார்ச்சர் பண்றான்.. இளைஞர் மீது நடிகை நித்யா மேனன் பகீர் புகார்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் நடிகர் நானி நடிப்பில் வெளியான வெப்பம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நித்யா மேனனுக்கும் திருமணம் என்ற செய்தி பரவி இதற்கு காரணமே சந்தோஷ் வர்க்கி என்கிற இளைஞர் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதனை நடிகை நித்யா மேனனே கூறியுள்ளார்.

இவனிடமிருந்து கடந்த ஆறு வருடங்களாக லவ் டார்ச்சர் அனுபவித்து வருவதாக கூறி இருக்கிறார் நித்யா மேனன். மேலும் நித்யாமேனனின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவருக்கு அன்றாடம் போன் செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளான் சந்தோஷ் வர்க்கி.

இதனை தொடர்ந்து நடிகை நித்யாமேனன் அவருடைய நம்பரை பிளாக் செய்தும் பயனில்லை. வேறு வேறு எண்களில் வந்து நித்யா மேனன் நித்யா மேனனை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்றும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுவரை மட்டும் நடிகை நித்யா மேனன் அவனுடைய 30 தொலைபேசி எண்களை பிளாக் செய்துள்ளாராம். இதுகுறித்து நடிகை நித்யா மேனன் இப்போது தெரிவித்திருப்பது தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …