ஜோதிகா – சூரியா இடையே மோதல்.. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்..!

நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா இடையே மோதல் போக்கு இருந்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில், விருமன் படத்தின் போஸ்டர்களில் நடிகை ஜோதிகாவின் பெயர் நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் தொடங்கியபோது வெளியிட்ட போஸ்டர்களில் நடிகை ஜோதிகாவின் பெயர் இடம் பெற்றிருந்தது.

சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கும் நிறுவனம் என்று அவருடைய பெயரை குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது ரிலீஸ் சமயத்தில் வெளியாகும் போஸ்டரில் சூர்யாவின் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது. ஜோதிகாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2D என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் தயாரித்த சூரரை போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றது.

இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் வெளியாகும் திரைப்படம் விருமன். சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

வரும் 12ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் போஸ்டரில் நடிகை ஜோதிகாவின் பெயர் நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

எதனால் ஜோதிகாவின் பெயர் நீக்கப்பட்டது என்று ஒருபக்கம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் மறுபக்கம் சூர்யா-ஜோதிகா இடையே ஏற்பட்ட மோதல் போக்கு தான் இதற்கு காரணம் என்று தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

உண்மை காரணம் என்ன என்று பல ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். விரைவில் சூர்யா மற்றும் ஜோதிகா தரப்பிலிருந்து  இந்த தகவல் குறித்த விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …