கணவருடன் லிப்-லாக்.. வீடியோவை ரிலீஸ் செய்து.. ஷாக் ஆக்கிய நிக்கி கல்ராணி..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை நிக்கி கல்ராணி, நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த திகில் திரைப்படமான டார்லிங் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். யாகாவாராயினும் நாகாக்க, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், ஹரஹர மஹாதேவகி, ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இடையில் மரகத நாணயம் படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் கதாநாயகன் ஆதியுடன் காதல் வயப்பட்டு அவரை சிலகாலம் காதலித்து வந்தார். அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

படங்களில் பிசியாக நடித்து வரும் நிக்கிகல்ராணி சமூக வலைதளங்களிலும் தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார். தன்னுடைய திருமண புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்த நிக்கி கல்ராணி தற்பொழுது தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை இந்த உரலியில் https://www.instagram.com/p/ChKKtLFB2Ex/ பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …