ஹாலிவுட் லெவல்.. பாத்தாலே தூகுதுங்க.. வாணி போஜன்-ஐ பார்த்து உருகும் ரசிகர்கள்..!

விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன். கூடவே மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்த இவர் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

அப்படி விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவரைப் பார்த்து சீரியல் இயக்குனர் ஒருவர் நான் இயக்கவுள்ள சீரியலில் ஹீரோயினாக உங்களால் நடிக்க முடியுமா..? என்று கேட்க அதனை ஒப்புக் கொண்டு சீரியல் நடிகையாக உருவெடுத்தார் நடிகை வாணி போஜன்.

அப்படி அவர் ஒப்புக் கொண்டு நடித்த சீரியல் பெயர்தான் “தெய்வமகள்”. தெய்வமகள் சீரியல் இவரை தமிழகம் முழுக்க பிரபலமாக்கியது. சன் டிவியில் ஒளிபரப்பான இந்த தெய்வமகள் சீரியல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நல்ல ரசிகர்கள் பட்டாளத்துடன் வெற்றிகரமாக ஓடியது என்றே கூறலாம்.

இந்த சீரியலில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களைக் கவர்ந்தன. அதிலும் முக்கியமாக வாணி போஜன் நடித்த சத்யா என்ற கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது சீரியல் ரசிகர்களை தாண்டி சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார் என்றுதான் கூறவேண்டும்.

சினிமா நடிகை போல இருந்தாலும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர் சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். தொடர்ந்து சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார் நடிகை வாணி போஜன்.

தற்போது சினிமாவில் ஆக்டிவாக இயங்கி வருகிறார் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக கதாபாத்திரங்கள் இருந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சியான ரூட்டை கையில் எடுத்துள்ளார் நடிகை வாணி போஜன்.

சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது இவர் புடவை சகிதமாக விழா ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் யாருப்பா இது வாணிபோஜனனா..? ஹாலிவுட் ஹீரோயினுக்கு புடவை கட்டின மாதிரி இருக்கே.. என்று வாயை பிழந்து வருகின்றனர். காரணம் பளபளவென இருக்கும் நடிகை வாணி போஜன் பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகை போலவே காட்சியளிக்கிறார் என்பது தான்.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை வாணி போஜன் தமிழ் சினிமாவின் விரைவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …