சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர் மற்றும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சில ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை மேகா ஆகாஷ்.
இந்த திரைப்படத்தில் வெளியீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக இந்த படம் வெளியாவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மேகா ஆகாஷ்.
இந்த திரைப்படம் எந்த தடையும் இல்லாமல் வெளியானது. எனவே, முதலில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தாலும் திரையில் அறிமுகமானது பேட்ட திரைப்படத்தில் தான் என்று கூறலாம்.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தபோதே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தமிழை காட்டிலும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.
தற்போது மட்டும் எட்டு தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேகா ஆகாஷ். தமிழில் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விரைவில் இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளது. தற்போது 25 வயதை கடந்துள்ள நடிகை சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடக்கமான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய அழகு கொஞ்சும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.