நடிகை பிரிகிடா சாகா யூடியூபில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற வெப்சைட்டில் நடித்து ரசிகர்கள் மத்தியில் டீச்சர் என்ற அடையாளத்துடன் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர், நடிகை மட்டுமில்லாமல் இயக்குனரும் கூட.
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அதேசமயம் துணை இயக்குனராக பணிபுரிந்து அசத்தினார். இந்த திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரவின் நிழல் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்பட்டது. பலராலும் பாராட்டப்பட்டது.
பவி டீச்சர் என்ற அடைமொழியுடன் பிரபலமாகியிருக்கும் நடிகை பிரிகிடா சாகாவின் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் மீம்களில் அதிகமாக இடம்பெறுகின்றவர் இவர் தான்.
மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். சமீபத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வெளியான வேலன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்யும் இவர் சமீபத்தில் புடவை சகிதமாக தேவதை போல இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தேவதை இறங்கி தெருவில் வந்து விட்டது.. அக்மார்க் நாட்டுகட்ட.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.