படக் குழுவே குழம்பி தவிக்கிறாங்க எப்படி தடுக்க… எப்படியோ அண்ணன் படம் லீக் ஆகுது ….

பத்தாவது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமாகி,  பூவே உனக்காக என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து மக்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்படுகிறார்.காதலுக்கு மரியாதை என்ற படத்திற்காகவும் திருப்பாச்சி படத்துக்கும் தமிழக அரசின் திரைப்பட விருதுகளை பெற்றிருக்கிறார்.

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய மிகச்சிறந்த படமான அண்ணன் தளபதி விஜய்யின்  “வாரிசு” படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார். மேலும் இதில் சரத்குமார்,பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஷாம், யோகிபாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.

இத் திரைப்படமானது தளபதி விஜய்யின் திரை வாழ்வில் இவர் நடிக்கும் 66 வது திரைப்படமாகும். எனவே மக்கள் அனைவரும் ரசிக்கும்படியான ஒரு குடும்பப் படமாக இதை உருவாக்குகிறார்கள்.

இந்த வேளையில் இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் இந்த படப்பிடிப்பு சில சர்ச்சைகளை சந்தித்தது பின்னர் சமரசம செய்யப் பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வாரிசு படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து ஏதாவது ஒரு காட்சியானது இணையத்தில் கசிந்த வண்ணமே உள்ளது. முதலில் சென்னையில் நடைபெற்ற காட்சிகள் கசிந்தது. அதன் பின்னர் விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட மருத்துவமனை காட்சி இணையத்தில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் தற்போது இணையத்தில் சில காட்சிகள் லீக்காகி இருப்பது படக்குழுவினரிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக  படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா உடன் காதல் காட்சியில் நடனமாடும் விஜய்யின் வீடியோ சுமார் இருபத்தி ஆறு நொடிகள்  வெளிவந்துவிட்டது. இதனால் படக்குழுவினர் இதனை எப்படி தடுப்பது என தெரியாமல் கடுமையான குழப்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து  படப்பிடிப்பு தளத்திற்கு செல்போன்களை கொண்டு வர படக்குழு தடை விதிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. எது எப்படியோ அண்ணன் படம் லீக் ஆகாமல் இருந்தால் சரி தான்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …