உறவினர்கள் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தை தனித்துவமாக துறையில் பிடித்திருக்கும் அருள்நிதி

இயக்குநர் பாண்டியராஜனிரன் வம்சம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான அருள்நிதி முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனான தமிழரசுவின் மகன் ஆவார். இவரின் விரட் மிரட்டலான நடிப்பை டிமான்ட்டி காலனியில்  பார்த்திருக்கலாம்.

 தற்போது இவர் நடித்திருக்கும் டைரி படத்தை  மீனாட்சி பாண்டியன் இயக்கியிருக்கிறார் படத்தில் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்கிறது இரண்டாம் பாதியில் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது இவர் நடிப்பு மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.

 வித்தியாசமான கதை அமைப்புகளை தேர்வு செய்வதில் அருள்நிதி வல்லவர் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை விட்டு நடித்து வருகிறார் அதே போல் இவரது நடிப்பு மட்டுமல்ல கதையும் திகில் நிறைந்ததாகவே இருக்கிறது.

 இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக அறிமுக நடிகை பவித்ரா மாரிமுத்து நடித்திருக்கிறார் இவரது நடிப்பு சற்று சுமாராக தான் உள்ளது. இப்படத்துக்கான இசையை ரான் ஈத்தன் அமைத்துள்ளார்.

இசை கதை நகர்தலுக்கு மிகவும் பக்கபலமாக இருப்பதோடு, ஊட்டியில் இரவுநேர சாலைகளை காட்டியிருப்பது நமது நெஞ்சை ஒரு நிமிடம் திக் திக் என்று  பயமுறுத்தும் படியே உள்ளது. இதில் கலை இயக்குனர் ராஜ் மற்றும் எடிட்டர் ராஜா சேதுபதியின் உழைப்பும் டைரி படமாக்கப்பட்ட விதம் மிகவும் அருமையாக இருக்கிறது.

திரில்லர் படத்தை விரும்புபவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும். இந்தப்படத்தில் 13வது பெண்டில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்த விபத்தில் ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது இதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க கூடிய பணியை போஸீஸ் அதிகாரியாக வரும் அருள்நிதி செய்வார்.

டைரி படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தாலும் சிலரது நடிப்புகள் வேண்டாத ஒரு பொருளாகவே இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி என்ற படத்தின் சாயலும் இந்த படத்தில் இருப்பது ரசிகர்களுக்கு புரிந்தது.காதல் படத்தை பார்த்தவர்கள் மாற்றாக ஒரு படத்தை பார்க்க வேண்டுமென்று விரும்பினால் கட்டாயம் டைரியை பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …