இரட்டை குழந்தைகளுக்கு தாயான நமிதா…. இப்ப எப்படி இருக்காங்க மச்சான்ஸ் பாருங்க!

“எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு காலடி எடுத்து வைத்தவர் நமீதா. கொஞ்சும் தமிழில் மச்சான்ஸ் என்று அழைக்கும் போது இளைசுகள் அனைவரும் கிறங்கி விடுவார்கள்.

தமிழ் திரையுலகின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நமீதா அஜித்தின் பில்லா, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் மிகவும் கவர்ச்சிகரமாக நடித்தவர்.

மேலும் இவர் ஏய், மகா நடிகன், இங்கிலீஷ்காரன், சாணக்கியா, பம்பரக்கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்சக்குதிரை என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து ஆண்களின் தூக்கத்தை கெடுத்தவர்.

சினிமாவில் மிகவும் பரபரப்பாக பிஸியாக இருந்த  நமீதா 2017ஆம் ஆண்டு வீரேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட துவங்கினார்.

 இவர் தன்னுடைய நாற்பத்தி ஒரு வயதில் கர்ப்பம் அடைந்தார். பின்னர் இதை பேபி பம்ப் போட்டோ ஷூட்  நடத்தி கர்பத்தை அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் தெரிவித்தார். இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.

நமிதாவுக்கு ஒரு குழந்தை இல்லை. இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த இரண்டு குழந்தைகளுடன் கணவனும், மனைவியும் கோயிலுக்கு  வந்திருந்த வீடியோவை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் போது மிக அதிக உடல் எடையுடன் காணப்பட்ட நமீதா இப்போது மிகவும் ஸ்லிம்மாக  உள்ள போட்டோவையும் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த அளவுக்கு உடல் மெளிந்து இருந்தது.

இந்த பதிவினைப் பார்த்த குஷ்புவும் என்னை போல நீ  ஸ்லிம்மாக மாறி விட்டாய் என்று  தெரிவித்துள்ளார்.அத்துடன் கியூட்  என கமெண்ட் செய்து இருக்கிறார்.

நாயை மையமாகக் கொண்டு உருவாகி வந்த   படத்தில் கடைசியாக நமீதா 2020 இல் நடித்து வந்தார்.  இனி இவர் வரும் படங்களில் நடிப்பார்களா? என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். நடிப்பரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …