சூப்பர் செய்தி … குதியாட்டம் இயக்குனர் ஸ்ரீகணேஷ்சுக்கு சென்னையில் டும்… டும்… கொட்டியாச்சு!

குருதி ஆட்டம், 8 தோட்டக்கள் என்ற படங்கள் மூலம் தன்னை ஓர் இயக்குனராக நிலைநிறுத்தி கொண்ட ஸ்ரீகணேஷ்க்கு சென்னையில் டும்…டும்…டும்… திருமணம் நடந்துவிட்டது.

தனது நீண்ட நாள் காதலியான சுகாசினி சஞ்சீவை  இயக்குனர் ஸ்ரீ கணேஷ்  மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

 இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். அதன் பின்புதான் இவர் குருதி ஆட்டம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் இவர் இயக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்ததால் இவருக்கு இயக்குனர் என்ற அந்தஸ்து மக்களிடையே கிடைத்தது.

 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, மீரா மிதுன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்கள். தனது இரண்டாவது படத்தை முரளியின் மகன் அதர்வாவை வைத்து எடுத்தார். அந்த படமானது மதுரையை மையமாகக் கொண்ட கதை ஏற்கனவே இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் படத்தில் ஆங்காங்கே அஜித்தின்  சாயல் தெரிந்ததால் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை வெறுத்து ஒதுக்கினார்கள். அதன் காரணமாக குருதி ஆட்டம் படம் கடுமையான தோல்வியை சந்தித்தது.

 மேலும் இவர் அஜித்துக்கு கதை சொல்லி இருப்பதால் அவரை வைத்து ஒரு படம் இயக்குவார் என்று தெரிகிறது. இது அதிகாரபூர்வமான தகவல் கிடையாது.மேலும் இது வரை அது பற்றிய எந்தவொரு தகவல்களும் இல்லை.

 தற்போது இவர் தான் காதலித்த பெண்ணை சென்னையிலுள்ள  முருந்தீஸ்வரர் கோயிலில்  குடும்பத்தார் முன்னிலையில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டு மணவாழ்க்கையில் களம்  கண்டுள்ளார்.

 இவர் திருமணம் செய்து கொண்டிருக்கக்கூடிய நடிகை வேறுயாருமல்ல உதயநிதியுடன் இணைந்து நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்த நடிகை சுஹாசினி சஞ்சீவைத் தான்  கை பிடித்துள்ளார். மேலும் இவர் சர்பத், வனம், சீதக்காதி உள்ளிட்ட படங்களிலும்  நடித்திருக்கிறார்.

இப்போது இவர் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்குப் பிறகாவது இவருக்கு நல்ல அதிர்ஷ்டம் அடித்து மிகச்சிறந்த படங்களை இயக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …