வெந்து தணிந்தது காடு பாடத்தோடு போட்டியிடுமா? நேற்று வெளி வந்த அருண் விஜய்யின் சினம் படம்!

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் இவரின்  யானை படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை இவருக்கு கொடுத்தது. பல வருடங்களாக சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் அருண்விஜய் ஆரம்ப நாட்களில் இவரது படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை. எனினும் பாண்டவர் பூமி மட்டுமே இவர் பெயர் சொன்னது.

 பிறகு தல அஜித்தோடு இணைந்து நடித்த படம்தான் இவருக்கு ஒரு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் இவர் கதாநாயகனாக இல்லாமல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது குமரவேலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள சினம் படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு  ஜோடியாக பல்லக்லால்வானி  நடித்திருக்கிறார் இசை சபீர் அவர்களால்  இதை அமைக்கப்பட்டுள்ளது.

சிறந்த கதைகளை தேர்வு செய்து அது சின்ன பட்ஜெட் படம் என்றாலும் பொறுமையாக நடித்து வரும் அருண் விஜய் யானை படத்தின் வெற்றியைப் போலவே இந்த படத்தின் வெற்றி அமையுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

 மேலும் சினம் படம் வெளிவருவதற்கு முன்பே நிறைய பாசிட்டிவ் கமெண்டுகளை பெற்றிருப்பதால்  இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

 போலிஸ் உடையில் அருண்விஜய் மிரட்டியிருக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக களமிறங்கியுள்ள நடிகை மிகவும் க்யூட்டாக இருக்கிறார். கதையை பொறுத்தவரை 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இதையடுத்து அவர்களை கண்டுபிடிக்கக் கூடிய வேளையில் மற்றும் தன் மனைவியின் கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த படகதையின் களம்.

போலீஸ் வேடம் என்று அதிகளவு வன்முறை காட்டப்படாமல் எந்த இடத்தில் எது தேவையோ அதை கொடுத்திருக்கிறார்கள். எனவே குடும்பத்தோடு அனைவரும் சென்று பார்க்கக் கூடிய வகையில்தான் இந்த படம் அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு மிகவும் பலமாக கதை அம்சம் இருக்கிறது.

நடிப்பு மற்றும் காட்சி அமைப்புக்கள் சிறப்பாக உள்ளது. சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட இருக்கக்கூடிய இந்த படமானது  இடைவேளைக்கு பிறகு மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

முன் பகுதி மெதுவாக சென்றாலும் அனைவரின் கவனத்தை ஈர்க்க வைக்கக்கூடிய படமாக இருக்கிறது.  போலீஸ் துறை சம்பந்தமான காட்சிகள் சற்று படத்தின் வேகத்தை குறைக்கிறது. இனி வரும் நாட்களில்தான் இது வசூலை வாரிக் குவிக்குமா அல்லது எப்போதும் போல் சினம் அருண்னை கைவிட்டு விடுமா என்பது தெரியவரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …