கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் சிம்பு மாநாடு படத்தில் அடைந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த படத்தில் சிம்புவின் கேரக்டர் மிகவும் முக்கியமான கேரக்டர் பேசப்பட்டது. இதில் சிம்பு தனது உடல் எடையை மிகவும் சிரமப்பட்டு குறைத்து சிறு வயது இளைஞனாக காட்சியளிக்கிறார்.

 இந்த படத்தில் நடிகர் சிம்பு டைரக்டர் கௌதம் மேனன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மூவரும் இணைந்து பட்டையை கிளப்பிய மிகச்சிறப்பான வித்தியாசமான படமாக இருக்கும் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் திரைக்கு வந்த முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது இதன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு என்பதை காணலாம்.

 இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் இரண்டாவது பகுதிக்காக காத்திருப்பதாகவும் தலைவர்தான்  சூப்பர் என்ற எனவும் அவருக்கு ஒரு வணக்கத்தை போட வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்கள்.

 

ஒரே நாளில் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்தில்  எந்த படம் கல்லா கட்டி உள்ளது. மேலும் உலக அளவில்  ஒரே நாளில் 12 கோடியை வசூல்  செய்துள்ளது. இது வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சனி, ஞாயிறு அன்று குடும்பத்தோடு அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வருவார்கள் என்று கருதப்படுகிறது. இதை அடுத்து இவருக்கு இணையாக போட்டி போட படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் கண்டிப்பாக இது வசூலை வாரிக் குவிக்கும் என்ற கணிப்பு உள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடிகர் சிலம்பரசன் போட்ட  உழைப்பு வீணாகவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் இந்தப் படத்தில் கட்டாயம் அவருக்கு உண்டு. மேலும் பலர் மத்தியில் இந்த படம் அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்திருக்கிறது. சிம்பு, ஏ.ஆர்.ரகுமான், கௌதம் மேனன் இவர்கள் மூவரின் கூட்டணி வெற்றி கூட்டணியாக  உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …