விரைவில் பொன்னியின் செல்வனின் அசத்தல் ஆடியோ உங்களுக்காக சன் டிவியில் …

பொன்னியின் செல்வன் இன் ஆடியோ லான்ச் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இந்த பிரம்மாண்டமான நிகழ்வில் மூன்று ஜாம்பவான்கள் கலந்துகொண்டு  விழாவை சிறப்பித்தார்கள். மேலும் இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டு வரலாற்று காவியமான பொன்னியின் செல்வனுக்கு பெருமை சேர்த்தார்கள்.

கல்கி எழுதிய நாவலைத் தழுவி இந்தப் படத்தை டைரக்டர் மணிரத்னம் டைரக்ட் செய்துள்ளார். மிகவும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் 5 மொழிகளில் வெளிவரக்கூடிய ஒரு பேன் இந்தியா படமாக உள்ளது.

திரைப்படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கேரக்டரும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார் டைரக்டர் மணிரத்னம் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அதிக ஈடுபாடோடு இந்த படத்தை  இயக்கியதில் காரணத்தினால் எதிர்வரும் தலைமுறைக்கு நம்முடைய வரலாறு எளிதில் போய் சேருக்கும். அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், பார்த்திபன், திரிஷா, ஜெயராம் ,கார்த்தி,  சரத்குமார் போன்ற எண்ணற்ற நட்சத்திரங்களோடு படம் பிடிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த படமானது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

மேலும் தற்போது இந்த பிரம்மாண்டமான வரலாற்று காவியத்தின் ஆடியோ வெளியீடு பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் வெளிவரும் போல.   இதற்கான அதிகாரப்பூர்வமான செய்தி மிக விரைவில் வெளிவரும். இதன் மூலம் மக்கள் அனைவருமே தங்கள் வீட்டிலிருந்து பொன்னியின் செல்வனின் இசையை கேட்டு ரசிக்கலாம்.

மணிரத்னம் படம் என்றாலே அதற்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பு தமிழக மக்கள் இடம் மட்டுமல்லாமல் இந்திய மக்களிடையேயும் உள்ளது. அந்த அளவுக்கு தனது தொழில் நுட்ப திறனால் அனைவரையும் கவரக்கூடியவர். டைரக்டர் மணிரத்தினத்தின் இந்த பிரம்மாண்ட படம் மிகவும் பிரம்மாண்டமான சாதனையை புரியும் என்பது தான் அனைவரும் கருத்தாக உள்ளது. ஆனால் திரைத் துறையைப் பொறுத்தவரை யாருடைய வெற்றியையும் எளிதாக நாம் கணிக்க முடியாது அந்த வகையில் இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியையும் வசூலையும்  வாரிக் கொடுக்கும் என்பதை டிசம்பர் 30 அன்று தெரிந்துகொள்ளலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …