காபி வித் காதல் – என்ன சொல்ல வராங்கன்னு புரியுதா..? – டிரைலர் விமர்சனம்!

கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு ஜீவா,ஜெய், சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியீடு செய்ய உள்ளார் மேலும் இந்த படத்தில்  ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

 இப்படத்திற்கான இசை யுவன் சங்கர் ராஜா  செய்திருக்கிறார். மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் இந்த படம் வரும் அக்டோபர் மாதம்  7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

 இந்த படத்துக்கான டிரைலர் வெளிவந்து விட்டது அந்த டிரைலர் எப்படி இருக்கிறது என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.  இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி ஜீவா ஜெய், ரைசா வில்சன், அமிர்தா போன்ற நடிகர்கள் கலந்து கொண்டார்கள்.

 காமெடி காதல் ஆக்ஷன் என்று எல்லாம் சரியான விகிதத்தில் கலந்து தான் இந்தப்படம் இருக்கிறது இந்த படத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று இதன் இயக்குனர் கூறினார். மேலும் ட்ரைலரில் ஜெயிக்க நிச்சயமான பெண்ணை ஜீவா ஓரக்கண்ணால் பார்ப்பது போலவும் உடனே அதை அடுத்து யோகி பாபு என்று கூறுவது போலவும் காட்சிகள் வருகிறது.

 படத்தில் மூன்று சகோதரர்கள் மூன்று காதலிகள் யார் யார் எப்படி காதலிக்கிறார்கள் என்று முக்கோணக் காதலை மையமாகக் கொண்டு தான் இந்த கதை செல்கிறது. சுந்தர் சி யின் வழக்கமான படங்களில் இருந்து இது சற்று வேறுபட்டு காணப்படுகிறது வசனங்களும் மிக நேர்த்தியாக இருக்கிறது.

 சில இடங்களில் ஆரம்பத்திலேயே குழப்பங்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏற்படும்.கதையில் சிக்கல் இருக்கிறதோ என்ற சந்தேகம் ட்ரைலரை பார்க்கும் போது தோன்றியது.

எது எப்படி இருந்தாலும்  காபி வித் காதல் திரைக்கு வரும்போது எப்படி என்பது எல்லோருக்கும் வெட்ட வெளிச்சம் ஆகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …