என்ன கன்றாவி இது..? – லெக்கின்ஸ் பேண்ட்.. புடவையில் அபர்ணா பாலமுரளி..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

தொடர்ந்து சர்வம் தாளமயம், தீதும் நன்றும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படம்தான் இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

அந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்போது நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான புதிதில் வாட்டசாட்டமாக.. தளதளவென இருந்த அபர்ணா பாலமுரளி சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாகி போயிருக்கிறார்.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், நான் உருவ கேலிகளை தாங்கக்கூடிய வலிமையை பெற்றிருக்கிறேன். என் மீது எனக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் நீங்கள் குண்டாக இருக்கிறார்கள் என்று சொன்னால் முதலில் வருத்தமாக இருந்தது.

ஆனால் இப்போது அதனை கண்டு கொள்வது கிடையாது. எடை கூடுவதற்கு உடல் பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கலாம். அனைவரும் மூன்று வேளைதான் சாப்பிடுகிறோம் நான் மட்டும் என்ன அதிகமாக சாப்பிடுகிறேனா..? எனவே இப்படியான விஷயங்களை நான் கண்டுகொள்ளாமல் கடந்து விட்டு வருகிறேன்.

நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொண்டு என்னை நடிக்க அழைப்பவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். ஒல்லியாக நடிகைகள் மட்டுமே கதாநாயகி ஏற்றுக் கொள்வார்கள் ரசிகர்கள் என்பது உண்மை கிடையாது என நாம் பல நடிகைகள் வரலாற்றில் பார்த்திருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் பிரபலத்துக்கும் அவர்களுடைய தோற்றத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. ஒரு நடிகரோ நடிகையோ இருவருக்கும் திறமைதான் முக்கியம். ஆனால், நடிகைகள் என்று வரும் பொழுது உடல் தோற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இல்லை என்றால் அம்மாவாக நடிக்கிறீர்களா..? என்று கேட்கிறார்கள்.

இது என்ன வகையான மனநிலை எனக்கு புரியவில்லை என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் லெக்கின்ஸ் பேன்ட் மற்றும் புடவை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …