வெந்துதணிந்தது காடு-க்கு iPhone..! – பொன்னியின் செல்வனுக்கு கூல் சுரேஷுக்கு கிடைத்த கிஃப்ட்..!

 கூல் சுரேஷ் என்றாலே ரசிகர்களுக்கு மிக நன்றாக தெரியும் இவர் ஒரு தீவிர சிம்பு வெறிய சிம்புவின் படம் மட்டுமல்லாமல் பிற படங்களையும் பார்த்து விமர்சனம் செய்து வருவதில் வல்லவர்.

 ஏற்கனவே இவர் செய்த பாசிட்டிவ்  விமர்சனத்தால் வெந்து தணிந்தது காடு மிக நல்ல முறையில் ஓடி வருகிறது. இவன் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு போடு வணக்கம் என்று கூறிய வாசகம் இன்றுவரை சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிய கூடிய ஒரு விடயமாக மாறியிருக்கிறது.

 இவர் எந்த படத்தை விமர்சனம் செய்கிறாரோ அதை பாசிட்டிவாக கூறினாலும் சரி நெகட்டிவாக கூறினாலும் சரி அது அவ்வாறு ஆக மாறி அந்த படத்துக்கு சில சமயம் பக்கபலமாகவும் சில சமயம் வேண்டாத ஒன்றாகவும் மாறி மாறி ஏற்படுவதை திரையுலகைச் சார்ந்தவர்கள் நம்புகிறார்கள்.

 அந்த வகையில்  பொன்னியின் செல்வன் படத்தைப் பார்ப்பதற்காக ஒரு மாதிரியை தந்திருக்கிறார் கூல் சுரேஷ். நடிகர் விக்ரம் தான் குதிரையில் ஏறி வருகிறாரோ என்று எல்லோரும் ஆவலாக காத்திருந்த வேளையில் இவரின் என்ட்ரி  அனைவரையும் வாய் விட்டு சிரிக்க வைத்ததோடு அல்லாமல் சிந்திக்க வைக்கவும் செய்தது.

 தொடர்ந்து ரசிகர்கள் கலகலப்புடன் இவர் என்ன பேசுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்க கையில் வைத்திருந்த அட்டை காகிதத்தில் வெந்து தணிந்தது காடு பிஎஸ் 1 க்கு வணக்கத்தை போட்டு என்று காட்டியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 மேலும் அவர் பேசுகையில் தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை விற்று சியான் விக்ரம் பயன்படுத்திய குதிரையை வாடகைக்கு எடுத்து பொன்னியின் செல்வனை பார்க்க வந்திருப்பதாக கூறினார்.

இதனையடுத்து படத்தை பார்த்து விட்டு மீதி என்ன என்ற கதையை பேசிக்கொள்ளலாம் என்று கூறி அந்த இடத்தை விட்டு மெதுவாக நகர்ந்து சென்றார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …