போடு தக்காளி..! – முருகதாஸின் வெறித்தனமான கம்பேக்..! – வில்லன் யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!

 நடிகர் தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் விஜயகாந்தின் படத்தில் நடித்து தற்போது உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை அடைந்து அடைந்திருக்கிறார். திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவரது தந்தை சந்திரசேகர் ஆவார்.

 ஆரம்ப கால கட்டத்தில் இவர் நடித்த பெருவாரியான படங்களும் தோல்வியை தந்தபோதும் துவண்டு விடாமல் தனது தோழரான விஜயகாந்த் படத்தில் இணைத்து நடிக்க வைத்த பின்பு தனக்கென்று ஒரு தனி இடத்தை நடிகர் விஜய் தக்க வைத்துக்கொண்டார்.

 இதைத்தொடர்ந்து அவர் விக்ரமன் படத்தில் நடிக்க இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் வெற்றி முகமாக  நடிகர் விஜய் ஜொலிக்க ஆரம்பித்தார்.

விஜய் தெறி, மெர்சல் போன்ற படங்கள் இவருக்கு ஒரு தனி பாதையை வகுத்துக் கொடுத்தது .மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து இவர் சில படங்களில் நடித்த போது அந்த படமும் இவருக்கு வெற்றியைத் தந்தது இதற்கு உதாரணமாகக் ஜில்லா படத்தை கூறலாம்.

 கொஞ்சம் காலமாகவே விஜய் நடித்து வரக்கூடிய படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை புரிய வில்லை என்று கூறலாம்.மேலும்  தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த பிஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை தராத சூழ்நிலையில் இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

மிக வேகமாக படம் பிடிக்கப்பட்டு வரும் இந்த வாரிசு படமாவது இவருக்கு கை கொடுக்குமா?விஜய் வசூலை வாரி எடுப்பாரா? என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போது கதாநாயகனாக நடிக்கும் ஹீரோக்களை சில படங்களில் மற்ற நடிகர்களுக்கு வில்லனாக நடிப்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது. உதாரணமாக விக்ரம் படத்தில் விஜயசேதுபதி நடித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்த அது போலவே பல நடிகர்களும் ஆன்டி ஹீரோவாக நடிக்க தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 அதையடுத்து தற்போது நடிகர் விஜய்யும் இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து இவர் மகேஷ்பாபுவின் படத்தில் அவருக்கு ஆன்டி ஹீரோவாக நடிப்பார் என்ற படத்தை முருகதாஸ் இயக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது. துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இந்த திரைப்படம் உருவாகும் என்றும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிகின்றது.

அந்த படத்தில்தான் விஜய் வில்லனாகவும்.. மகேஷ் பாபு ஹீரோவாகவும் இணைந்து நடிப்பார்கள் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் வில்லனாக நடித்திருந்தாலும் கூட அந்த வில்லத்தனமான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசித்தார்கள். ஆனால், இந்த முறை 100% வில்லனாக நடிப்பார் விஜய் என்று தெரிகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …