“கண்ணு கூசுது செல்லம்.. வீட்டுல சொல்லி சுத்தி போட சொல்லுங்க..” – எம்புட்டு அழகு.. அலற விடும் அம்ரிதா அய்யர்..!

பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை அம்ரிதா அய்யர். சமீபத்தில் காபி குளியல் போட்ட இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

திரைப் படங்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய அம்ரிதா அய்யரா இது..? என்று வாயை பிளந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்மவியூகம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி.

மட்டுமில்லாமல் நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான தெனாலிராமன், நடிகர் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்த சோனாக்ஷி சின்ஹாவுக்கு தோழியாக… நடிகர் விஜயின் தெறி திரைப்படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக வரும் மணப்பெண் தோழியாக.. என சினிமா பயணத்தை தொடர்ந்து வந்த இவருக்கு படை வீரன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு கிடைத்தது. அதை ஆண்டு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி என்ற திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்து இருந்தார். ஆனால் இந்த திரை இரண்டு திரைப்படங்களும் இவருக்கு நல்ல வெற்றியை கொடுக்கவில்லை.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் இவருக்கு பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு அம்ரிதா அய்யர்-ன் ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் நடிகர் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய அழகான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் மற்றும் காமெடி கலந்த திரைப்படமான காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருக்கிறார் நடிகை அமிர்தா ஐயர்.

இந்நிலையில் சிகப்பு நிற உடையில் பளீரென்ற அதனுடைய சிரிப்பை வெளிப்படுத்தி பளபளவென ஜொலிக்கும் இவரது புகைப்படமும் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணு கூசுது செல்லம்.. வீட்டில் சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்க.. எம்புட்டு அழகு.. என்று அலறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …