தல தீபாவளிக்கு மாமியார் வீடா…? இல்ல பிக்பாஸ் வீடா..? – பிக்பாஸ் 6 அப்டேட்..!

பிக்பாஸ் 6  : டி. ஆர். பி-ல் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் விஜய் டிவியில் இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள பல பிரபலங்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்நிகழ்ச்சியை தங்களுக்கான பிளாட்பார்ம் ஆகவே பல பிரபலங்கள் பார்க்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பலர் தங்கள் கேரியரில் சாதித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொடர்ந்து, உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

சீசன் ஒன் தொடங்கி சீசன் 5 வரைக்கும் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பொழுது போக்கிற்கு எவ்வித குறையும் இல்லை என்பதோடு நெட்டிசன்களுக்கு கமெண்டுக்கும் பஞ்சமில்லை என்றே கூறலாம்.

எனவே கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது திருமணமான தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்கள் பங்கு கொள்ளப் போவதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடமாக சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து சமீபத்தில் இருவரும் திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.

தற்போது திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்ததை அடுத்து  ஃபர்ஸ்ட் மந்த் அனிவர்சரி கொண்டாடி வருகிறார்கள். அவர்களது திருமணம் முதலே இருவரது உருவப் பொருத்தத்தை வைத்து பலர் கேலியும், கிண்டலும் செய்து வந்துள்ளனர்.

ரவீந்தரும் you-tube மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரிவ்யூ கொடுத்து வந்துள்ளார். அவரது ரிவ்யூவை பார்ப்பதற்காகவே அவருக்கு மிகப்பெரிய பாலோவர்ஸ் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில படங்களை அவர் தயாரித்தும் உள்ளார், பிக் பாஸ் பிரபலம் ஒருவரை வைத்தும் இவர் படம் தயாரித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளுவது போன்ற போட்டோஸ் மற்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோ தல தீபாவளி கொண்டாடும் நேரத்தில் மாமியார் வீட்டிற்கு செல்வதற்கு பதிலாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறாரா என்று நிட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …