அட பாவிங்களா..? – பிக்பாஸ் 6 ஒளிபரப்பு நேரத்தை கண்டு கடுப்பான ரசிகர்கள்..!

விஜய் டிவியில் எத்தனை சோக்கள் அறிமுகமானாலும்   ஷோவிற்கு ரசிகர்களிடையே என்றுமே மவுஸ் குறைவதில்லை.சீசன் 1 தொடங்கி சீசன் 5 வரை ரசிகர்களின் பேராதரவுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது.

பல சர்ச்சைகள் கொரோனா பாதிப்பு அனைத்தையும் கடந்து இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது.

இந்நிகழ்ச்சி பிரபலமானதற்கு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கியதும் ஒரு காரணமாகும். மேலும் பிக் பாஸ் ஷோ வில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் தங்கள் திறமையை திறம்பட நிரூபித்தார்கள் என்று கூறலாம்.

இந்த வருடம் பிக் பாஸ் ஷோ வரும் அக்டோபர் 9ஆம் தேதி ஒளிபரப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் நாள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய எந்த அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருந்தாலும் சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சில போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு வாழ் திரை விமர்சகர், மாடலிங் துறையை சேர்ந்தவர், சீரியல் நடிகர்கள், டான்ஸ் மாஸ்டர் மற்றும் இயக்குனர் போன்ற பல துறையை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் அண்ணன் மணிகண்டனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக வெளியான அறிவிப்பால் சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு முடிவு கட்டும் விதமாக இந்நிகழ்ச்சிகள் தன் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இப்படி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் ஷோ வின் நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை இரவு 10:30 முதல் 11:30 மணி மணி வரை மற்றும் கமல்ஹாசன் வரும் நாட்கள் ஒன்பதரை முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நேரம் மாற்றத்தால் பிக் பாஸ் ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க முடியுமா முடியாதா என்று வருத்தத்தில் உள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …