சிறுகதைகளை தழுவியே இவரது படங்கள்.. யார் அந்த இயக்குனர்.. வெற்றிமாறன் பற்றி தெரியுமா..?

பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன் அவர்கள். பெயருக்கு ஏற்றார் போலவே அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி படங்களாக அமைந்தது.

இவரது திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் சிறந்த சமுதாய சீர்திருத்த கருத்துக்களையும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தெளிவாக எளிமையாக சொல்லியிருப்பார்.

பொல்லாதவன் ஆடுகளம் விசாரணை அசுரன் வடசென்னை பாவ கதைகள் போன்ற திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் ஆறு தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. அசுரன் விசாரணை போன்ற திரைப்படங்கள் சிறந்த திரைக்கதை காண தேசிய விருதையும் பெற்றுள்ளது.

இவரது திரைக்கதைகள் பெரும்பாலும் சிறு கதைகளை தழுவித்தான் இருக்கும், 2019 இல் வெளியான அசுரன் திரைப்படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்னும் சிறுகதையை தழுவியே எழுதப்பட்டதாகும். படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமூக வலைதளங்களிலும் இப்படத்திற்கு ரசிகர்கள் சிறந்த பாசிட்டிவ் கமெண்ட்டை பதிவு செய்தனர்.தற்போதைய இவர் விடுதலை என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இத்திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. விடுதலை திரைப்படமும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் என்னும் சிறுகதையை தழுவி எழுதப்பட்டதாகும்.

இத்திரைப்படத்தில் பொதுவுடைமை பாதிக்கும் அவரை என்கவுண்டர் செய்யத் துடிக்கும் போலீஸ் ஆக இருவருக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான உரையாடலையே திரைப்படமாக வெற்றிமாறன் அவர்கள் உருவாக்கியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இத்திரப் படத்தை  சுவாரசியமாக கதைக்களத்துடன் இயக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் ஷூஸ் ஆப் டெத் என்ற நாவலை தழுவி ஒரு திரை கதையை எழுதி இருந்தார். அக்கதை விவசாயிகளின் தற்கொலையை மையமாகக் கொண்டது இக்கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் கதையை கூறியதாகவும் அதற்கு ரஜினிகாந்த் அவர்கள் இக்கதையில் அதிக பாலிடிக்ஸ் சிறப்பதால் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும் இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிறந்த கதைகளுக்கு மக்களிடம் என்றுமே வரவேற்ப்பு இருக்கும் என்பது வெற்றிமாறன் அவர்களின் திரைப்படங்களை சிறந்த சான்று.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …