நவராத்திரியில் கொலு…. சிரிப்பழகி சினேகா வீட்டில் பாரம்பரிய கொண்டாட்டம்..!

 நடிகை சினேகா ‘மானசி’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாள பிறகு உலகத்தில் மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் காத்திருந்த சிநேகாவிற்கு  தமிழ் திரையுலகில் “என்னவளே” என்ற படத்தின் மூலம் முதல் வாய்ப்பு வந்தது.

 இந்தப் படமும் அவருக்கு கை கொடுக்காததால் சற்று சிரமத்தோடு தான் அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடிக்கத் தொடங்கினார்.

 இதைத்தொடர்ந்து 2003ஆம் ஆண்டு தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த “வசீகரா” என்ற படம்தான் அவருக்கு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்தில் இவர் ரசிகர்களை இவர் சிரிப்பின் மூலம் கவர்ந்து இழுத்தார்.

 இதனையடுத்து தமிழில் பல படங்களில் இவருக்கு கிடைத்தது. இவர் தமிழில் பார்த்திபன் கனவு, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப், ஆனந்தம் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் உடைய இதயத்தில் புகுந்தார். இதைத் தொடர்ந்து இவருக்கு புன்னகை அரசி என்ற பட்டத்தை ரசிகர்கள் அளித்து மகிழ்ந்தார்கள்.

 இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்று என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பின்னால்  சின்னத்திரையில் நடந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் தலையை காட்டி வரும் இவர்  திரைப்படங்களில் குறிப்பிட்ட கேரக்டரை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

காலாச்சார பாரம்பரிய நிகழ்வுகளை கொண்டாடிவரும் ஆதர்சன தம்பதிகளான பிரசன்னா மற்றும் சினேகா தற்போது அவர்கள் வீட்டில் நவராத்திரி கொலுவை வைத்திருக்கிறார்கள். இந்த கொலுவிற்காக தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து பூஜை செய்துள்ள வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

இந்த ஒரு பாரம்பரிய விஷயங்களையும் விட்டுவைக்காத சினேகா தற்போது இந்த பூஜையை செய்து வருவது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மேலும் சினிமா துறையில் இருந்தாலும் நம்முடைய கலாச்சாரத்தை பின்பற்றக்கூடிய  அற்புதமான குடும்பமாக இவர்கள் குடும்பம் விளங்குகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …