என்னது..? இந்த படங்கள் எல்லாம் “வாரிசு” இயக்குனர் எடுத்த படங்களா..? – ஷாக் ஆன ரசிகர்கள்..!

43 வயதாகும் வம்சி பைடிபைலி தெலுங்கில் முன்னா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்பு 2010ல் பிருந்தாவனம் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.

இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர், காஜல் அகர்வால், சமந்தா, பிரகாஷ்ராஜ், அஜய், பிரகதி, கோட்டார் சீனிவாச ராவ் மேலும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 35 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல். முதல் படத்திலேயே தனது வெற்றியை பதித்தவர்.

மேலும் தொடர்ந்து தெலுங்கின் பிரபல நடிகர் மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து உங்களுக்காக ஒருவன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.இத்திரைப்படம் விவசாயிகளைப் பற்றிய சமூக மாற்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும்.

மகேஷ் பாபுவின் யதார்த்த அதிரடி நடிப்பால் இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி கண்டது. இது கிட்டத்தட்ட 100 முதல் 130 கோடி வசூல் சாதனை படைத்தது திரைப்படம்.

இப்படத்தில் மகேஷ் பாபு உடன் பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ், ஜெகபதி, பிரகாஷ்ராஜ், மீனாட்சி போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

மேலும் வம்சி ஈஸ்வர் வர்சம் மாஸ் பத்ரா போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.மேலும் 2013இல் யூவடு என்ற திரைப்படத்தையும் 2016ல் தோழா என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கினார்.இவர் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதினை பெற்றவர்.

தற்போது இவர் தமிழில் இயக்கும் “வாரிசு” திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் யோகி பாபு, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஷாம், சம்யுக்தா, சரத்குமார் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமிழ் இசை அமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தெலுங்கின் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரின் இயக்கத்தில் விஜய் நடித்து வருவதால் இப்படம் குறித்த ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …