“சொர்கத்தின் ஒரு துண்டு..” – விதவிதமான கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள அமலா பால்..!

சொர்க்கத்தின் ஒரு துண்டு என்று மாலத்தீவின் அழகை வர்ணித்து அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை அமலா பால். இவர் அறிமுகமான சிந்துசமவெளி படத்தில் ஆரம்பித்து இவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படமான ஆடை திரைப்படம் வரை பல சர்ச்சைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

இவருடைய சினிமா வாழ்க்கை தான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால் மறுபக்கம் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் சர்ச்சையாகவே முடிந்தது மற்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தலைவா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நடிகை அமலாபால் அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் சில அரசியல் காரணங்களால் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. அதிகாலை 4:00 மணி காட்சிகளுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகி முடிந்திருந்த நிலையில் கடைசிநேரத்தில் தலைவா படத்திற்கு வந்தது தலைவலி.

தமிழ்நாட்டில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று பல திசைகளில் இருந்து அழுத்தம் வந்தது மிகப் பிரதானமாக இந்த படத்திற்கு அப்போதைய ஆளும் அரசு கொடுத்த அழுத்தம் தான் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியாவதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

குறிப்பாக இந்த படத்தின் தலைப்பின் டேக் லைனாக குறிப்பிடப்பட்டிருந்த டைம் டு லீட் என்ற வசனம் தான் இந்த படத்தின் ரிலீஸுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்தது. அதிகாலை 4 மணி வரை படம் வெளியாகும் என்றுதான் கூறினார்கள். ஆனால், கடைசி நேரத்தில் உலகம் முழுதும் படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் இந்த படத்தின் ரிலீஸ் தடுத்து நிறுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்துதான் இந்த திரைப்படம் வெளியானது. ஆனால், அதற்குள் இணையத்தில் இந்த படத்தின் முழு HD பிரிண்ட் வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது.

ஆனாலும் கூட நடிகர் விஜயின் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய துணையாக நின்றனர். ஒருவழியாக போட்ட காசை எடுத்துவிட்டோம் என்ற நிலைக்கு வந்தார் தயாரிப்பாளர். இந்த படத்தின் இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால்.

ஆனால் இந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்ட நடிகை அமலாபால் தற்போது சுதந்திர பறவையாக தன்னுடைய நண்பர்களுடன் காலத்தை கடத்துகிறார்.

தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாத சூழ்நிலையில் மாலத்தீவுக்கு சென்றிருக்கும் நடிகை அமலாபால் அங்கேயே கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …