இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய குரு பக்தியை கற்றுக்கொடுத்த ஐஸ்வர்யா பச்சன் மகள்!

 உலக அழகி ஐஸ்வர்யா ராய்  சிறந்த நடிகரான அமிதாப் பச்சனின் மகனாகிய அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்துக்கு பின்னால் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த பெண்குழந்தை   இயக்குனர் மணிரத்னத்திடம் நடந்து கொண்ட முறை வைரலாக பரவி வருகிறது.

 இப்போதைய சூழ்நிலையில் எந்த குழந்தைகளும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதோ அல்லது குருவினை மதித்து நடப்பது என்பது ஒரு கேள்விக் குறியாகி இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஆராத்யா தனது அம்மாவின் குருவாகிய இயக்குனர் மணிரத்தினத்தை மதித்து நடந்து கொண்ட விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

 ஏற்கனவே பொன்னியின் செல்வன் புரமோஷன் மேடையில் மணிரத்தினம் தான் தனது குரு என்று மிகவும் மரியாதையோடு ஐஸ்வர்யா பச்சன் பேசி இருந்தது அனைவருக்கும் தெரியும். தன் குருவை தன் வாழ் நாள் முழுவதும் மறக்க மாட்டேன். அவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன் என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து இவர் பேசியிருந்தார்.

 மேலும் மணிரத்தினத்தின் படப்பிடிப்பு தளத்தில் எனது மகள் பார்வையிட்ட போது அவளின் பிரமிப்பு அவளின் கண்களில் வெளிப்பட்டது என்று ஐஸ்வர்யாராய் தன் மகளைப் பற்றி கூறியிருந்தார். இது அவளுக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன் என்ற கருத்தையும் கூறினார்.

மேலும் ஆராத்யா  இயக்குனர் மணிரத்தினத்தின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார். அதுபோலவே மணிரத்னமும் தன் மகள் மீது கொண்டிருக்கக்கூடிய பாசம் இனிமையானது.

 

ஒருநாள் என் மகள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போது அவளுக்கு “ஆக்ஷன்” சொல்லும் வாய்ப்பை மணிரத்தினம் தந்ததும் அவள் அதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.

 தற்போது இந்த அனுபவத்தை மிகவும் உற்சாகமாக உணர்வதோடு ஓ மைகாட் இந்த வாய்ப்பு எனக்கு இந்த வயசில் கொடுத்த இயக்குனர் மணிரத்தினத்தை அம்மாவைப் போலவே தானும் உயர்வாகவும், பெருமையாகவும் நினைப்பதாக கூறுகிறார். அவள் வளர வளர இன்னும் அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

 இதன் மூலம் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை இவர்கள் குருபக்தி மூலம் வெளிப்படுத்தி இருப்பதால் நிச்சயம் இவர்கள் நல்ல நிலையில்  உயர்வார்கள். மேலும் இன்றைய தலைமுறைக்கு இது ஒரு பாடமாக அமையும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …