திருமணம் செய்து கொள்ள கூடாது என்று அக்ரிமெண்ட் போட்ட தயாரிப்பாளர்..! – நயன்தாராவின் ஆச்சரிய பதில்..!

நயன்தாரா 2003இல் மனசினகாரே என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். பின் 2005 இல் ஐயா என்னும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

இவர் அறிமுகமானது முதலே சரத்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, வெகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

பின்பு நடிகரும் இயக்குனருமான எஸ். ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலி என்ற படத்தில் நடித்தார்.விஜய், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா போன்ற நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் படங்களில் நடித்ததில் சிம்புவுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார்.இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மும்மொழிகள் திரைப்படங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை மக்கள் மனதில் பிடித்தவர்.

கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அத்திரைப்படங்கள் அனைத்தும் நயன்தாராவின் நடிப்புக்காக மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

நாயகியே மையமாகக் கொண்ட அறம், ஆக்சிஜன், ஐரா, கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களை தேர்வு செய்து நடித்திருப்பார். இவரது சிறந்த நடிப்பிற்காக மக்கள் இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று பிரியமாக அழைக்கிறார்கள்.

நடிகர் நடிகைகள் படங்களில் ஒப்பந்தமாகும் பொழுது தயாரிப்பாளர்கள் சில அக்ரீமென்ட்களில் கையெழுத்து வாங்குவது வழக்கம். ஏனென்றால் இடையில் நடிகர் நடிகைகள் திருமணம் செய்வதால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் உண்டாகும் என்பதால் அப்படி கையெழுத்து வாங்குவார்களாம்.

அப்படி இவர் நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தில் நடிக்கும்போது தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் இத்திரைப்படம் முடியும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று அக்ரீமெண்டில் எழுதி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த அக்ரீமெண்ட் படித்துப் பார்த்த நயன்தாரா சரிதான் நீங்கள் எழுதியுள்ளது. நான் ஒரு தயாரிப்பாளராக இருந்தால் இப்படித்தான் அக்ரிமெண்ட் தயார் செய்வேன் என்று சொல்லி அக்ரீமெண்ட் கையெழுத்திட்டாராம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …