மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி தரும் நடிகை “குத்து” ரம்யா!

 தமிழில் “குத்து” திரைப்படத்தின் மூலம் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவுக்கு ஹீரோயினியாக நடித்தவர்  திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா. இந்த படத்திற்கு பின்னால் இவரை குத்து ரம்யா என்று அழைத்தால் தான் அனைவருக்கும் தெரியும்.

 குத்து ரம்யா அர்ஜுனனுடன் கிரி தனுஷுடன் பொல்லாதவன் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தவர். இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள்.

 ரம்யா கடைசியாக ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து சிங்கம்புலி என்ற படத்தில் நடித்தார். படத்தில் நடிக்கும்போதே இவருக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. இந்த ஈடுபாட்டின் காரணமாக இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து பார்லிமென்ட் தேர்தலுக்காக போட்டியிட்டார்.

 தேர்தல் வெற்றியை தொடர்ந்து அவர் கடந்த ஐந்து வருடங்களாக எம்பி பொறுப்பை வகித்து வருகிறார். அதனால் சினிமாவில் பெரிய அளவில் ஈடுபட்டு நடிக்க சந்தர்ப்பம் அமையவில்லை.

இவரின் கடைசி படமாக 2014ல் பிரபல தெலுங்கு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த நகரஹவு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

 இதனையடுத்து தற்போது மீண்டும் நடிப்பு துறையில் இறங்க அவர் ஆயத்தம் ஆகி விட்டார்.  அதனை அடுத்து தற்போது இவர் நடிக்கும்  படத்திற்கு ரவிச்சந்திரன்  படத்தில் வரும் ஹிட் பாடலான “சுவாதி முத்தின மலஹனியே” என்ற  பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ராஜ் பி ஷெட்டி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 இந்தப் படத்தை நடிகையான ரம்யாவும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான செய்திகள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

 மேலும் இவர் நடிப்பில் வெளிவரவுள்ள இந்த படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் மீண்டும் அதே தரமான நடிப்பை இவர் படங்களில் வெளிப்படுத்துவார் என்றும் அவர்கள் அவருடைய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

 எனவே இவரின் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு எந்த படம் இருக்குமா? ரம்யாவின் நடிப்பால் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவிக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …