பிக் பாஸ் சீசன் 6 செட் போட்டியாளர்களுக்கு முன்பே வீட்டிற்குச் சென்ற பிரபலம்… யார்?

ரியாலிட்டி ஷோர்களின் நம்பர் ஒன்றாக இருப்பது பிக் பாஸ் ஷோ ஆகும். வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பாக உள்ளது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக தயாராகி வருகிறது கடந்த சீசன் 4 மற்றும் 5 சரியாக ரீச் ஆகாததால் சீசன் 6 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த விஜய் டிவி முடிவு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியை மற்ற அனைத்து சீசனை தொகுத்து வழங்கியது போலவே உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள் ரக்ஷன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, விஜே மகேஸ்வரி, வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர், மைனா நந்தினி, விஜே அர்ச்சனா, ரட்சிதா மஹாலெட்சுமி, சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தொகுப்பாளர் டிடி, ஜிபி முத்து, காமெடி நடிகர் மதுரை முத்து போன்றவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இவர்கள் தான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது.

இந்நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடங்கும் முன்பே பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் டிவி பிரபலம் ஒருவர் சென்றுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீசன் 5 ல் திருநங்கை ஒருவர் கலந்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் அவரால் அந்நிகழ்ச்சியை தொடர முடியாமல் வெளியில் சென்றார்.

தற்போது ஒளிபரப்பாக உள்ள சீசன் 6 நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு திருநங்கை கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றி பெற ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும்  தெரிவித்துள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …