நடிகை ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்லாமல் பின்னணி பாடகியும் ஆவார். அவ்வப்போது.. தன்னுடைய சொந்த குரலில் பாடல்களை பாடி ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது ஓயா யா என்ற பாடலை பாடியிருக்கிறார்.
இந்த பாடலின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா.
தன்னுடைய குரலில் பல்வேறு படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகை ஆண்ட்ரியா ஒரு கட்டத்தில் திரைப்பட நடிகையாக உயர்ந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கதைக்கு தேவை என்றால் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கூட நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
இதனை எப்படியோ கேட்டுவிட்ட இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஆடையின்றி சில காட்சிகளில் நடிக்க வைத்தார் என்று கூறப்பட்டது.
ஆனால் பிறகு அந்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கூடிய இந்த பாடல் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.