முதல் மனைவியை சரத்குமார் விவாகரத்து செய்ய ராதிகா காரணம் இல்லை..! – இந்த நடிகை தான்..! – பலரும் அறிந்திடாத தகவல்..!

தமிழ் சினிமாவில் சூரியன் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நடிகர் சரத்குமார் பல முன்னணி நடிகர்களோடு ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர்.

இதனை அடுத்து இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு பெரிய ஹிட்டை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கதாநாயகனின் அந்தஸ்தையும் கொடுத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

1984ல் நடிகர் சரத்குமார் சாயாதேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவரது பெண்தான் வரலக்ஷ்மி.

இவருக்கு பூஜா என்ற தங்கையும் இருக்கிறார் வரலட்சுமி தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாக நடித்து நல்ல பெயரை தற்போது சம்பாதித்து வைத்திருக்கிறார்.

மேலும் சாயா தேவியை திருமணம் செய்து கொண்ட பின்னர் நக்மாவை சந்தித்து நக்மா மீது காதல் வயப்படுகிறார்.

இதனைத் தொடர்ந்து நக்மாவை திருமணம் செய்து கொள்ள தான் சாயா தேவியை அவர் விவாகரத்து செய்திருக்கிறார். நாளடைவில் இவர்கள் காதலில் கருத்து வேறுபாடு ஏற்பட இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இதனையடுத்து நடிகை நக்மா அரசியலில் குதித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக தற்போது திகழ்ந்து வருகிறார்.இதனை அடுத்து அவர் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். எனவே ராதிகாவை திருமணம் செய்வதற்காக இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை. அதற்கு முன்பு இவர் காதல் வலையில் விழுந்த காரணத்தால்தான் விவாகரத்து செய்திருக்கிறார் என்பது தற்போது வெளிப்பட்டு விட்டது.

மேலும் தற்போது வரை நடிகை நக்மா திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது இதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாக உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தனது கடின உழைப்பால் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் எந்த அளவுக்கு இவர் உயர்ந்திருக்கிறார் என்றால் இவரது உழைப்புக்கு நாம் பாராட்டுகளை தரவேண்டும். மேலும் எந்த வயதிலும் மிகவும் இளமையாக இளம் நடிகர்களுக்கு கடும்போட்டி தரக்கூடிய அளவில் இவர் இருக்கிறார் என்பது சிறப்பான ஒன்றாகும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …