திருமூர்த்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரவளி ( Ravali ) . தொடர்ந்து காந்தி பிறந்த மண், அபிமன்யு.பெரிய மனுஷன், கரிசக்காட்டு பூவே உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தார்.
மூத்த நடிகர்களுடன் தொடர்ந்துநடித்து வந்ததால், விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறை நடிகர்கள் அண்ணி ரேஞ்சில் வைத்து ஒதுக்கிவிட்டனர்.இதனால் தமிழில் படங்கள் ஏதுமில்லாமல் தனது சொந்த மாநிலமன ஆந்திராவுக்கே ரவளி சென்று விட்டார்.
ஹைதராபாத்தில் பாய் பிரண்ட் ஒருவருடன் செட்டில் ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இறுதியில் அவரையே திருமணமும் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் அம்மணி.
தன்னுடைய கட்டழகால் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தவர் அம்மணி. சினிமாவில் உச்சத்தில் இருந்த போது குடும்பப் பாங்கினியாக நடித்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே அதனை சரிகட்ட கவர்ச்சி ஆயுதத்தை எடுத்து ஆட்டம் போட்டார் அம்மணி.
ஆரம்பத்தில் குடும்பப்பாங்கினியாக நடித்த இவர் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி குதிரையாக துள்ளி குதித்தார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி கொண்ட அம்மணி பிரபல அரசியல் கட்சி ஒன்றி கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றினார்.
இந்நிலையில், அம்மணியின் இளமை கால புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.