இதற்கு பதிலாகத்தான் நடிகை தமன்னா பாகுபலியில் நடித்தார்..! – ரசிகர்களை ஷாக் ஆக்கிய ராஜமௌலி..!

தமிழ் சினிமாவின் கனவுக் கன்னிகளில் ஒருவரான நடிகை தமன்னா தற்போது வெப்சீரிஸ்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை தமன்னாவை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா..? என்ன கண்டிப்பாக இருக்க முடியாது.

அதிலும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடிகை தமன்னாவின் அழகை பார்த்த ரசிகர்கள் சொக்கிப் போனார்கள்.

அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை தமன்னா முதல் பாகத்தில் மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் இவருடைய காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் நடிகை தமன்னா பாகுபலி படத்தில் எப்படி இணைந்தார் என்று உண்மையை உடைத்து இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. அதாவது நடிகை தமன்னா நடித்த அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் முதலில் ஒரு குரங்கு தான் நடிக்க வைப்பதாக இருந்தோம் .

உண்மையான குரங்கிற்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைப்பது தான் என்னுடைய திட்டம். கதைப்படி ஒரு குரங்கு தான் தன்னுடைய குரங்கு படையை வழிநடத்தும். ஆனால், மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் சில சிக்கல்களை எதிர்கொண்டோம்.

அதன் பிறகு குரங்குகளை கிராபிக்ஸ் மூலம் காட்டலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக சில நிமிட காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் உருவாக்கி பார்த்தோம். அது எங்களுக்கு திருப்தியாக இல்லை. இது படத்தின் தன்மையை மாற்றும் விதமாக இருந்தது.. இதுவே மிகப்பெரிய பின்னடைவாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது என்று சந்தேகம் இருந்தது.. நீண்ட யோசனைக்குப் பிறகு அந்த குரங்கு கதாபாத்திரம் மற்றும் குரங்கு கூட்டத்திற்கு பதிலாக மனிதர்களையே நடிக்க வைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

அப்படி குரங்கிற்கு பதியா நடிகை தமன்னா மற்றும் அவர்களை பின்பற்றும் ஒரு கூட்டத்தை உருவாக்கினோம் படத்திற்கும் படத்தின் கதை வைத்திருக்கும் அதை மிகவும் பொருத்தமாக பொருந்தி வந்தது.

நடிகை தமன்னா போல் ஒரு ஹீரோயின் இருப்பதால் கமர்சியல் காரணங்களுக்காக சில காதல் காட்சிகளையும் சேர்த்தோம் என்று கூறி இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இவ்வளவு அழகான ஒரு நடிகையை குரங்குக்கு பதிலாகத்தான் நான் நடிக்க வைத்தேன் என்று கூறியிருப்பதை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று நமட்டு சிரிப்பு சிரித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …