தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான தான் டாணாக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தான் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி நாயர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.
இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் நடிகை அஞ்சலி நாயர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நெடுநல்வாடை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை அஞ்சலி நாயர்.
அந்த திரைப்படம் பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த அஞ்சலி நாயர் தன்னுடைய அழகின் காரணமாக மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தார். பிறகு சில விளம்பரப் படங்களில் கூட நடித்திருக்கும் இவர் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த நெடுநல்வாடை திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய இவர் இந்த திரைப்படம் கொரோனாவால் ரிலீஸ் தள்ளிப்போனது சற்று இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இரண்டு ஆண்டுகளாக இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.
ஆனால் டாணாக்காரன் திரைப்படத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றக்கூடிய பெண்ணாக நடித்திருந்தேன். அங்கு பயிற்சிக்கு வரும் விக்ரம் பிரபு என்னை காதலிப்பது போல காட்சிகள் இருந்தது.
போலீசாக நடிப்பதற்கு பெரிய பயிற்சி எதுவும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. இயக்குனர் சொன்னதை அப்படியே நாடித்துக் கொடுத்தேன் என்று பேசியிருக்கிறார். மேலும், இயக்குனர்களின் விருப்பமான நடிகையாக நான் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
நிச்சயம் அதற்கான முயற்சியில் நான் எப்போதும் இருப்பேன் என்று கூறி இருக்கிறார் அஞ்சலி நாயர். சமீப காலமாக, தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். இதை பார்த்த ரசிகர்கள் டாணாக்காரன் படத்தில் நடித்த அஞ்சலி நாயரா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.