அனுஷ்கா-வுக்கு திருமணம்…! – மாப்பிள்ளை இவரா..? – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கான மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டிருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு என்ற திரை படத்தில் ஹீரோயினாக இவர் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நடிகர்கள் ரஜினி, சூர்யா, விக்ரம், விஜய், அஜித், உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கும் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் ஹீரோயினாக தொடர்ந்து நடித்தார்.

தற்போதும் கூட இவர் சினிமாவில் நடிக்கலாம். ஆனால், தன்னுடைய உடல் எடை அதிகரித்து இருப்பதால் சினிமாவில் நடிக்க தயங்குகிறார் நடிகை அனுஷ்கா. இதற்காக பல சிகிச்சைகளை மேற்கொண்டு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு என பல விஷயங்களை செய்து ஒரு வழியாக உடல் எடையை குறைத்திருக்கிறார்.

ஆனால் எவ்வளவு உடல் எடையை குறைத்தாலும் மீண்டும் இழைத்த வேகத்திலேயே உடல் எடை கூடி விடுவதால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் நடிகை அனுஷ்கா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக, நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதுகுறித்து நடிகை அனுஷ்காவும் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை விட என்னுடைய திருமணம் இப்போது முக்கியமான விஷயமா..? எதற்காக என்னுடைய திருமணம் குறித்து எனக்கே தெரியாத தகவல்கள் இணையத்தில் பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்த கிட்டதட்ட உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தகவல் வந்திருக்கிறது. தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட நகைக்கடை தொழிலதிபர் ஒருவர் நடிகை அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

தற்போது துபாயில் நகைக்கடை வைத்திருக்கும் தெலுங்கானா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட தொழிலதிபர் ஒருவர் நடிகை அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்றும் தெரிவிக்கின்றன.

நீண்ட கால வரன் தேடலுக்கு பிறகு நடிகை அனுஷ்கா தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நகைக்கடையை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும், இவர் நகை கடை மட்டுமில்லாமல் திரைத்துறையிலும் பங்கு கொண்டிருக்கிறார் எனவும் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வந்திருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகர் பிரபாஸ் நடிகை அனுஷ்கா ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

பிரபாஸ் அனுஷ்காவின் காதலுக்காக தனியாக முகநூல் பக்கங்கள் கூட தொடங்கி இவருடைய ரசிகர்கள் நடத்தி வருகிறார்கள். இப்படி இருக்க திடீரென நடிகை அனுஷ்கா நகைக்கடை அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கின்றது.

இதுகுறித்து அனுஷ்காவின் தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …