பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி யாக நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி மிக சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
தற்போது பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருகிறது. மேலும் இது தான் உண்மையான பேன் இந்திய திரைப்படம் என்பதை மெய்ப்பித்து விட்டது.
ஐஸ்வர்யா லட்சுமி விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்திருந்தார்.
ஏற்கனவே சாய்பல்லவி நடித்த கார்கி என்ற படத்தை தயாரித்த இவர் தற்போது மீண்டும் குமாரி என்ற மலையாள படத்தை தயாரித்து வருகிறார். எனவே இவர் தற்போது நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து தயாரிப்பாளர் என்ற அந்தஸ்திற்கு சென்றுவிட்டார்.
மேலும் தற்போது அம்மு என்ற பெயரில் தயாராகியிருக்கும் தெலுங்கு படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ஓ டி டி தளத்தில் வெளிவர கூடிய நிலையில் உள்ளது.
இந்த படத்தில் இவர் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கேரக்டர் நிச்சயமாக பெண்ணியம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் இருபத்தி எட்டாம் தேதி குமாரி என்ற மலையாள படமும் வெளியாக உள்ளது. இந்தப் படமும் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கதையை கருவாக கொண்டிருக்கும்.
மேலும் குமாரியில் இதுவரை வெளிவராத ஜானர், புராண இதிகாச தொடர்புடைய திரில்லர் படமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தவிர தற்போது ஐஸ்வர்யா லட்சுமி விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவரும் கட்டா குஸ்திக் படத்தில் தற்போது நடித்து வருகிறார் .மேலும் பிரியா இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு வரும் பெயரிடாத படத்திலும் அசோக் செல்வன் மற்றும் வசந்த் ரவியோடு இணைந்து நடித்து வருகிறார்.