தன்னை விட 30 வயது அதிகமான ஹீரோவுடன் ரொமான்ஸ் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகிகளின் வரிசையில் இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்.

கலா மாஸ்டர் கலந்துகொண்ட மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவரது நடனத் திறமையை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். இதனை அடுத்து இவருக்கு அட்டகத்தி, சட்டப்படி குற்றம், ரம்மி போன்ற படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த நடிப்பில் அவர் பட்டையை கிளப்பி இருப்பார்.

இதனைத் தொடர்ந்து இளம் வயதில் இருக்கும் இவருக்கு அம்மாவாக நடிக்க கூடிய வாய்ப்பு காக்கா முட்டை படத்தில் கிடைத்தது. எந்த ஒரு வளர்ந்து வரும் கதாநாயகியும் ஏற்க மறுக்கும் அம்மா கேரக்டரை இவர் சவாலாக ஏற்று இன்ற படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதைப் பெற்றார்.

இதை தொடர்ந்து இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்ததோடு ரசிகர்கள் வட்டாரமும் பெருகியது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற படங்களிலும் பின்னிப் பெடல் எடுத்து வருகிறார்.

இவர் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். அதுபோலதான் இவர் நம்ம வீட்டுப் பிள்ளை, தர்மதுரை போன்ற படங்களில் தனது நடிப்பு நேர்த்தியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் உருவான திட்டம் 2 மற்றும் பூமிகா இந்த இரண்டு படங்களுமே சமீபத்தில் ஓ டி டி யில் ஓடி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர் 60 வயதாக கூடிய ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் அம்மணி. இந்த படத்தை இயக்க ஜி எஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி அருள்குமார் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இதையடுத்து இவரது ரசிகர்கள் எந்த படத்தில் எந்த தோற்றத்தில் இவர் தோன்றி கலக்கப் போகிறார் என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து பேசி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …