எட்டு படங்களில் நடிகர் சூரி, சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
காமெடியனாக பட்டையைக் கிளப்பிய வேலைகள் தான் அந்த எட்டு படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்நிலையில் கதாநாயகனாக அந்தஸ்து பெற்றிருந்தாலும் தற்போது மீண்டும் இவர் ஒரு கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயனோடு இணைய உள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது எந்த படம் என்று நீங்கள் யோசிப்பது நன்றாக தெரிகிறது. தீபாவளியன்று வெளிவர இருக்கக்கூடிய பிரின்ஸ் படத்தில் தான் இந்த கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.
நடிகர் சூரி ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திலும் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். அதன்பிறகு பசங்க2 முப்பரிணாமம், தொண்டன் என சில படங்களில் தொடர்ந்து இவர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து வெளிவரக்கூடிய பிரின்ஸ் திரைப்படத்திலும் இவர் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பது அனைவருக்கும் உற்சாகத்தை தடுப்பதோடு இவர்கள் காமினேஷன் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகும் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
மேலும் பல படங்களில் சிவகார்த்திகேயனோடு கெஸ்ட் ரோலில் செய்யும் போது அவ ஒரு காமெடியனாக களத்தில் இருந்தார் ஆனால் தற்போது அந்த காமெடியன் நிலையிலிருந்து மாறி கதாநாயகனாக உருவாக்கியிருக்கிறார்.
எந்த நிலையிலும் தன்னுடைய நட்பை மறவாமல் அவருடன் இணைந்து பிரின்ஸ் படத்திலும் கெஸ்ட் ரோல் செய்திருப்பது இவர்களின் நட்பை பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
இது போன்று நட்போடு என்று இருப்பவர்களை பார்ப்பது அரிது என்றும் இவர்கள் நட்பு கடைசி வரை இப்படியே தொடர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.
இந்த காலத்தில் இவர்கள் நட்பு இவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவர்களின் நட்பு நடிப்பு அல்ல… உண்மை…என்பது இனி அடுத்து வரும் படங்களிலும் கெஸ்ட் ரோலில் அசத்துவார் சூரி என்று அனைவரும் கூறுகிறார்கள்.