லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு… சுதா கொங்கரா உடன் இணைகிறாரா?

சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற இவருடன் தற்போது சிம்பு இணைகிறார் என்ற செய்தி  பரவலாக பரவி வருகிறது.

சூரரைப்போற்று படமானது ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டிருந்தது கதையாகும். இதில் சூரியா மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் நாயகியாக அபர்ணா பாலமுரளி படு சூப்பராக நடித்தார்.

 ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் இந்த படத்தில் சூப்பர் ஹிட்டாக இருந்தது.

 இந்த படம் மட்டும் மொத்தம் 5 விருதுகளை வாரிக் குவித்தது. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜீவி பிரகாஷ்குமார்க்கும், சிறந்த படத்துக்கான விருதை ஜோதிகாவும் சிறந்த திரைக்கதைக்கான விருதை சுதா கொங்காராவும் பெற்றார்கள்.

இந்நிலையில் அடுத்ததாக கேஜிஎப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் சுதா கொங்கரா இணைந்து உள்ளதாக தெரிகிறது. இது குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

 இதையடுத்து இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேசும் இதில் இணைகிறார். இதனை தொடர்ந்து இந்தப் படபிடிப்பானது அடுத்த ஆண்டு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி அதிகமாக கேங்ஸ்டர் படங்களில் சிம்புவை காணலாம் என்று நினைத்த ரசிகர்களுக்கு தற்போது கேஜிஎப் தயாரிப்புடன் சுதா பொங்கும் இணைந்து சிம்புவோடு ஒரு படத்தை தர இருப்பதால் ரசிகர்கள் குஷி அடைந்திருக்கிறார்கள்.

ஆக இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட கெட்டப்பில் வந்து லிட்டில் சூப்பர் ஸ்டார்  வருவார் என்ற நம்பிக்கையில் இந்த படத்திற்கான பெயர் என்ன என்ன கேரக்டர் ரோல் இவர் செய்யப் போகிறார் என்பது பற்றி சிம்புவின் ரசிகர்கள் இணையத்திலேயே பட்டிமன்றம் நடத்தி வருகிறார்கள். மிக விரைவில் இதற்கான பதிலை தனது ரசிகர்களுக்கு சிம்பு தெரிவிப்பார் என்று தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …