தமிழகத்தில் ஆளும் கட்சி திமுகவின் பிரமுகர் சைதை சாதிக் என்பவர் சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும் பொழுது பாஜகவில் இருக்கக்கூடிய நான்கு நடிகைகள் நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம், மற்றும் குஷ்பூ ஆகிய 4 பேரும் ஐ**ங்கள் என்று பேசியிருந்தார்.
அதிலும் நடிகை குஷ்புவை திமுக பிரமுகர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இவர் 6 முறை போட்டு இருக்கிறார். யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் குஷ்பூ திமுகவில் இருந்த போது, 6 முறை குஷ்புவை வைத்து கூட்டம் போட்டிருக்கிறார் என்று இரட்டை அர்த்தத்தில் மோசமான கருத்தை பேசியது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இது இணையவாசிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து திமுக தலைமை பொறுப்பில் இருக்கும் திருமதி கனிமொழி அவர்கள் மன்னிப்பு கேட்டு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கு நடிகை குஷ்பூ, கனிமொழி அவர்களுக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
மட்டுமில்லாமல் இந்த பேச்சை பேசிய சைதை சாதிக்கும் தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நடிகை குஷ்புவின் மனது இதனால் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரம் இப்படியாக முடிந்தது.
ஆனால், மறுபக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகைகளான சீரியல் நடிகை ஷர்மிளா மற்றும் நடிகை கஸ்தூரி ஆகிய இருவரும் இந்த விவகாரத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
முன்னதாக நடிகை குஷ்பூ திமுக பிரமுகர் சைதை சாதிக்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு வாலண்டியராக வந்து ஆஜரானார் சீரியல் நடிகை ஷர்மிளா.
இவர் சமீபகாலமாக பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பல்வேறு கருத்துகளை பேசி வருகிறார். இவருடைய பேச்சு வருவது எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. என்றாலும் கூட அவர் சார்ந்த கட்சியினர் இவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நான் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்றும் போராளி என்றும் தன்னை தானே அடையாளப்படுத்திக்கொள்ளும் ஷர்மிளா, நடிகை குஷ்புவின் இந்த பதிவுக்கு ஆங்கிலத்தில் ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிப்பதற்கு உகந்தது, திராவிட பசங்க என்ற ஹேஸ்டேக்கிலிருந்து உங்களுடைய கவனத்தை பின் வாங்குமாறு நான் விரும்புகிறேன்.
இந்த திராவிடியா பசங்க என்ற ஹேஸ்டேக் நடிகை கஸ்தூரி-யால் முன்னெடுக்கப்பட்டு சங்கி ஸ்டாக்குகளால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது என்று பதிவிட்டு இருந்தார். நீங்களும் இந்த பேச்சை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று சைதை சாதிக்கின் பேச்சுக்கு மன்னிப்பு கொடுங்கள் என்று கெஞ்சுவது போல ஒரு பதிலை கொடுத்திருந்தார்.
இதை பார்த்த நடிகை கஸ்தூரி Condone என்றால் ஏற்றுக்கொண்டு அதனை ஊக்கம் அளிப்பது. Condemn என்றால் அதனை எதிர்ப்பது. நல்ல வேளை நீங்கள் காண்டம்-ன்னு கேக்காம விட்டீங்க. நீங்கள் நிஜமாகவே டாக்டர் தானா..? அல்லது வசூல்ராஜா டைப்பில் இருக்கும் திராவிடியன் மாடல் டாக்டரா..? எது எப்படியோ, திரவிடியா என்ற வார்த்தை அருவருக்கத்தக்கது என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்று ஷர்மிளா-வுக்கு செருப்பால் அடித்தது போல பதில் கொடுத்திருக்கிறார் கஸ்தூரிஇவர்களுடைய குடுமிப்பிடி சண்டை இணையத்தில் வைரலாகி வருகின்றது.